வீடு / சமையல் குறிப்பு / கராஹி/காடை பன்னீர்

Photo of Karahi/Kadhai Paneer by Farrukh Shadab at BetterButter
3252
828
4.6(0)
0

கராஹி/காடை பன்னீர்

Nov-30-2015
Farrukh Shadab
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • இந்திய
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 250 கிராம் பன்னீர் துண்டுகளாக நறுக்கியது
  2. 4 தக்காளி வெளுக்கப்பட்டு தோல் விதை நீக்கப்பட்டு பொடியாக நறுக்கியது
  3. 1 தேக்கரண்டி வறுத்தச் சீரகத் தூள்
  4. 1/2 தேக்கரண்டி சீரகம்
  5. 5-6 கருமிளகு
  6. 1/2 தேக்கரண்டி காஷ்மீர் சிவப்பு மிளகாய்த் தூள்
  7. 1 1/2 தேக்கரண்டி கராஹி மசாலா
  8. 1 பெரிய குடமிளகாய் துண்டுகளாக நறுக்கப்பட்டது
  9. 1 தேக்கரண்டி கஸ்தூரி வெந்தயம்
  10. 1 தேக்கரண்டி சர்க்கரை
  11. 1 1/2 தேக்கரண்டி + இஞ்சி ஜூலியன்
  12. 2 தேக்கரண்டி கிரீம்
  13. 1/2 எலுமிச்சையின் சாறு
  14. சுவைக்கேற்ற உப்பு
  15. 1 தேக்கரண்டி எண்ணெய்
  16. 1 1/2 தேக்கரணடி வெண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு கராஹியில்/அகலமான அடிப்பாகமுள்ள கடாயில், எண்ணெய் வெண்ணெயைச் சூடுபடுத்துக. மிளகு, சீரகம் சேர்த்து வெடிக்கச் செய்யவும்.
  2. நறுக்கியத் தக்காளியைச் சேர்த்து உயர் தீயில் 2-3 நிமிடங்கள் வதக்கவும். கரா மசாலா, சீரகத்தூள், சிவப்பு மிளகாய்த் தூள், இஞ்சி ஜூலியன் சேர்க்கவும்.
  3. மசாலாக்கள் நன்றாக வேகும்வரையிலும் எண்ணெய் பிரியும்வரையிலும் வேகவைக்கவும்.
  4. குடமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். குடமிளகாயை அதிகம் வேகவைக்கவேண்டாம், சற்றே கடிக்கும் பதத்தில் இருக்கட்டும்.
  5. கஸ்தூரி வெந்தயம், எலுமிச்சை சாறு, உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கவும். பன்னீர் துண்டுகள், கிரீம், சேர்த்து மெதுவாகக் கலந்து மேலும் ஒரு நிமிடம் வேகவைக்கவும்.
  6. பரிமாறும் தட்டில் எடுத்து முறுமுறுப்பான லாச்சா பராத்தாக்கள், புள்கா, நான் அல்லது புலாவ் என உங்களுக்குப் பிடித்தவற்றோடு சூடாக உண்டு மகிழவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்