Photo of Balushahi by Farrukh Shadab at BetterButter
2623
156
4.4(0)
0

பாலுஷாஹி

Dec-16-2015
Farrukh Shadab
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • கடினம்
  • பண்டிகை காலம்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 3 கப் மைதா, சமன் செய்யப்பட்டது
  2. 4 தேக்கரண்டி, தயிர், நன்றாகக் கடையப்பட்டது (ஐஸ் குளிர் நிலையில்)
  3. 4 தேக்கரண்டி குவிக்கப்பட்ட நெய்
  4. 1/2 தேக்கரண்டி சோடா
  5. ஒரு சிட்டிகை நசுக்கப்பட்ட குங்குமப்பூ (விருப்பம்)
  6. 4 தேக்கரண்டி, ஐஸ் குளிர் நிலை உடைய தண்ணீர்
  7. பொரிப்பதற்கு நெய் அல்லது எண்ணெய்
  8. சர்க்கரை பாகிற்கு:
  9. 2 1/2 கப் சர்க்கரை
  10. 1 1/4 கப் தண்ணீர்
  11. ஒரு சிட்டிகை குங்குமப்பூ
  12. 1/2 தேக்கரண்டி ஏலக்காய்த் தூள்
  13. சிராய்த்த பிஸ்தா பருப்புகள்
  14. அலங்கரிக்க சில்வர் வார்க்

வழிமுறைகள்

  1. சர்க்கரை பாகிற்கு:
  2. ஒரு கடாயில் சர்க்கரை, தண்ணீர், குங்குமப்பூவைச் சேர்த்து கொதிக்கவிடவும். சிம்மில் ஒன்றிரண்டி கம்பி பதம் வரும்வரை சில நிமிடங்கள் வைத்து, எடுத்து வைக்கவும்.
  3. பாலுஷாவிற்கு:
  4. ஒரு கிண்ணத்தில் மாவு, சோடா, நசுக்கிய குங்குமப்பூவைக் கலந்து நெய் சேர்த்து கலவையை விரல்களால் பொறபொறப்பான கட்டிகளாகச் செய்துகொள்ளவும். தயிர் சேர்த்து கலந்துகொள்க.
  5. ஐஸ் குளிர் நிலையில் தண்ணீர் சேர்த்து, அவை ஒன்றரக் கலந்து மாவாகும்வரை பிசையவும். அதிகம் பிசையவேண்டாம். மாவு மென்மையாக இருக்கவேண்டும்.
  6. மாவின் பதம் மிதமான மென்மையில் இருக்கவேண்டும். மூடி 30-45 நிமிடங்கள் வைக்கவும்.
  7. மாவை சமமானச் சிறிய எலுமிச்சை உருண்டை அளவிற்கு உருட்டிக்கொள்க. உங்கள் கட்டைவிரலால் ஒரு பள்ளம் ஏற்படுத்திக்கொள்ளவும். (ஓட்டையல்ல). ஒரு கடாயில் அல்லது குழியான பாத்திரத்தில் நெய்யைச் சூடுபடுத்திக்கொள்க.
  8. நெய் நடுத்தர சூட்டில் இருக்கும்போது தீயை குறைத்து மெதுவாக தயாரித்து வைத்துள்ள பாதுஷாக்களை மிதமான சூட்டில் உள்ள நெய்யில் விடவும்.
  9. சில நொடிகளுக்குப் பிறகு, பாதுஷா உப்பி மேலே மிதக்க ஆரம்பிக்கும். பொரிக்கும்போது வானலியில் அதிமாகச் செய்யவேண்டாம்.
  10. மிகக் குறைவானச் சூட்டில் எல்லா பக்கங்களும் சமமான பொன்னிறத்தில் வரும்வரை பொரிக்கவும். ஒவ்வொரு தொகுப்பையும் வறுப்பது தோராயமாக 20-25 நிமிடங்கள் பாதுஷாவின் அளவிற்கேற்றாற்போல் ஆகும்.
  11. அழகான பொன்னிறத்தில் வந்ததும், எடுத்து சற்றே ஆறவிடவும். இதே செயல்முறையை அனைத்துத் தொகுப்புகளுக்கும் மேற்கொள்ளவும்.
  12. பொரித்த பாதுஷாக்களை சூடான சர்க்கரைப் பாகில் கிட்டத்தட்ட 2 நிமிடங்களுக்கு தொய்த்தெடுக்கவும்.
  13. பாகிலிருந்து எடுத்து ஒரு டிரேயில் அல்லது தட்டில் சில நிமிடங்கள் வைக்கவும். சிராய்த்த பாதாம் பருப்புகளையும் சில்வர் வார்க்கையும் கொண்டு அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்