வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் குழம்பு

Photo of Chicken curry by Sujata Limbu at BetterButter
3356
436
4.7(0)
3

சிக்கன் குழம்பு

Dec-17-2015
Sujata Limbu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஹிமாச்சல
  • ஃபிரையிங்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1/2 கிலோ சிக்கன்
  2. 2 நடுத்தர அளவிலான வெங்காயம், பொடியாக நறுக்கப்பட்டது
  3. 1 நடுத்தர அளவிலான தக்காளி, பொடியாக நறுக்கப்பட்டது
  4. 2 பச்சை மிளகாய், பிளந்தது
  5. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  6. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள்
  7. 1 தேக்கரண்டி கரம் மசாலாத்தூள்
  8. 1 பிரிஞ்சி இலை
  9. 3 ஏலக்காய்
  10. 6 கிராம்பு
  11. 3 இன்சு இலவங்கப்பட்டை
  12. கொஞ்சம் மிளகு
  13. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  14. 2 தேக்கரண்டக தயிர்
  15. 2-3 நேக்கரண்டி எண்ணெய்
  16. சுவைக்கு உப்பு
  17. அலங்கரிக்கக் கொஞ்சம் கொத்துமல்லி இலைகள்

வழிமுறைகள்

  1. சிக்கன துண்டுகளை நன்றாகக் கழுவி தண்ணீரை வடிகட்டவும்
  2. ஒரு கடாயில்/வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்துக, பச்சை மிளகாய் உலர் மசாலாக்களைச் சேர்த்து அருமையான வாசனை வரும்வரை வறுக்கவும்.
  3. அதன் பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து அது பொன்னிறமாகும்வரை வறுக்கவும். அதன்பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேரத்து பச்சை வாடை போகும்வரை வறுக்கவும்.
  4. இப்போது உப்பு, தக்காளி, மஞ்சள்தூள் ஆகிவற்றை ஒன்றாகச் சேர்த்து கலவை உலரும் வரை நன்றாகக் கலக்கவும். ஒரு மூடியால ்தக்காளி மிருதுவாகும்வரை மூடி போட்டு மூடி சிம்மில் வைக்கவும்.
  5. சிக்கன் சேர்த்து அது வெளுக்கும்வரை வறுக்கவும். அதன் பின் சிவப்பு மிளகாய்த்தூள் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வேகவைக்கவும்.
  6. சிக்கன் சற்றே மூழ்கும் அளவிற்கு த் தண்ணீரை ஊற்றவும். அதிக தண்ணீர் ஊற்றவேண்டாம். குழம்பு தண்ணீர் போலாகிவிடும். சிக்கன் பாதி வேகும்வரை மூடியிட்டு மிதமானச்சூட்டில் வேகவைக்கவும்.
  7. கரம் மசாலாவையும் தயிரையும் சேர்க்கவும். நன்றாகக் கலந்து சிக்கன் மிருதுவாகும்வரை வேகவைக்கவும்.
  8. சாதம் , சப்பாத்தி அல்லது பிரியாணியோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்