வீடு / சமையல் குறிப்பு / பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம்

Photo of Moong dal sago kheer by Asiya Omar at BetterButter
754
5
0.0(0)
0

பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம்

Oct-08-2017
Asiya Omar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம் செய்முறை பற்றி

பாசிப்பருப்பு, ஜவ்வரிசி, வெல்லத்துடன் தேங்காய்ப்பால் அல்லது கொரகொரப்பாக அரைத்த தேங்காய் சேர்த்தால் சுவையோ சுவை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. பாசிப்பருப்பு -100 கிராம்
  2. ஜவ்வரிசி - 50 கிராம்
  3. வெல்லம் - கால் கிலோ
  4. தேங்காய் - அரை முறி
  5. ஏலப்பொடி - கால் தேக்கரண்டி
  6. நெய் 1 -2 தேக்கரண்டி
  7. முந்திரி , உலர் திராட்சை -சிறிது அல்லது தேங்காய் நறுக்கியது.

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். ஜவ்வரிசியையும் தனியாக ஒரு பாத்திரத்தில் தனியாக தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வெல்லத்தை ஒரு கப் தண்ணீர் விட்டு உருக்கி வைக்கவும்.
  2. தயார் ஆன பாசிப்பருப்பு, வெல்லம், ஜவ்வரிசி எல்லாம் ஒரு பாத்திரத்தில் ஒன்று சேர்க்கவும்.
  3. தேங்காய் அரைமுறியை கொரப்கொரப்பாக அரைத்து சேர்க்கவும்.
  4. கொதி வரவும் நெய்யில் தேங்காய் துண்டுகள் வறுத்தோ அல்லது முந்திரி திராட்சை வறுத்தும் சேர்க்கலாம்.
  5. சுவையான பாசிப்பருப்பு ஜவ்வரிசி பாயாசம் தயார். விருந்தினருக்கு கோப்பையிலோ அல்லது டம்ளரிலோ குடிக்க கொடுக்கலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்