Photo of Maasi porichathu by Asiya Omar at BetterButter
474
2
0.0(1)
0

Maasi porichathu

Oct-11-2017
Asiya Omar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்ரீலங்கன்
  • நான் வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாசி 25 கிராம்
  2. எண்ணெய் - 4 தேக்கரண்டி
  3. சின்ன வெங்காயம் நறுக்கியது -100 கிராம்
  4. நாட்டு தக்காளி - 100 கிராம்
  5. நறுக்கிய பச்சை மிளகாய 1
  6. மிளகாய்த்தூள் -1/2 தேக்கரண்டி
  7. மல்லி, கருவேப்பிலை - சிறிது
  8. தேங்காய்த்துருவல் - 4 தேக்கரண்டி
  9. உப்பு - தேவைக்கு.

வழிமுறைகள்

  1. மாசி பொடித்து ,தேங்காய் துருவியது எடுத்து வைக்கவும்.
  2. கொரகொரப்பாக பொடிக்கவும்.
  3. மற்ற பொருட்கள் தயார் செய்யவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயம், மிளகாய், கருவேப்பிலை, மல்லி இலை சேர்த்து வதக்கவும்.
  4. வதங்கியதும் தக்காளியை பொடியாக நறுக்கியோ அல்லது ஒரு சுற்று மிக்ஸியில் சுற்றியோ சேர்க்கவும்.மிளகாய்த்தூள் சேர்க்கவும்.சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. சிம்மில் வைத்து வதக்கவும். பச்சை வாடை போகட்டும்.
  6. மாசி பொடித்தது சேர்க்கவும்.
  7. தேங்காய்த்துருவல் சேர்த்து பிரட்டி விடவும்.
  8. சுவையான மாசி பொரிச்சது தயார். இதனை ரொட்டி, இடியப்பம், சோற்றுக்கு பக்க உணவாகப் பரிமாறலாம்.
  9. செமையாக இருக்கும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
SivarRanajani R N kathiravan
Oct-12-2017
SivarRanajani R N kathiravan   Oct-12-2017

மாசி என்றால் என்ன?

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்