வீடு / சமையல் குறிப்பு / சத்தி அவியல்

Photo of Sathya  aviyal by Krishnasamy Vidya Valli at BetterButter
878
2
0.0(0)
0

சத்தி அவியல்

Oct-12-2017
Krishnasamy Vidya Valli
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சத்தி அவியல் செய்முறை பற்றி

கூட்டு குடும்பத்தின் தத்துவத்தை உணர்த்தும் வகையில் செய்யப்படும் உணவு வகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நீளவாக்கில் நறுக்கிய காய்கள் - 2 கப்
  2. தேங்காய் துருவல் - 1 1/2 கப்
  3. மஞ்சள்பொடி- 1 தேக்கரண்டி
  4. சீரகம் - 2 தேக்கரண்டி
  5. பச்சை மிளகாய் - 2
  6. மிளகாய் வற்றல் - 4
  7. நீளவாகாகில் நறுக்கிய மாங்காய் துண்டு- 10 அல்லது புளி கரைசல் - 2 தேக்கரண்டி
  8. உப்பு - 2 தேக்கரண்டி
  9. தேங்காய் எண்ணெய் - 4 தேக்கரண்டி
  10. கருவேப்பிலை - 3 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. காய்களை ஒரு கப் தண்ணீர்விட்டு அடி கனமான பாத்திரத்தில் மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்
  2. குழைய வேக வேண்டாம் பாதிக்குமேல் வெந்ததும் புளி கரைசல் உப்பு சேர்க்கவும்
  3. மாங்காய் சேர்பதாக இருந்தால் தனியாக வேகவைத்து சேர்க்கவும்
  4. தேங்காய் துருவல், சீரகம், மிளகாய் வத்தல், பச்ச மிளகாய் சேர்த்து தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைக்கவும்
  5. காய்கள் வெந்ததும் (தண்ணீர் வற்றியவுடன் ) அரைத்த விழுதை சேர்த்து கிளறவும் .
  6. தேங்காய் எண்ணெய் விட்டு கருவேப்பிலை கிள்ளிப்போட்டால் சத்தி அவியல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்