Photo of Black gram poridge (or) ball by Natchiyar Sivasailam at BetterButter
714
8
0.0(1)
0

Black gram poridge (or) ball

Oct-25-2017
Natchiyar Sivasailam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. களிமாவு 1 கப்
  2. கருப்பட்டி பொடித்தது 11/2 கப்
  3. தண்ணீர் 11/2 கப்
  4. நல்லெண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்
  5. களிமாவுக்குத் தேவையான பொருட்கள்
  6. கறுப்பு உளுந்தம்பருப்பு 3 கப்
  7. பச்சரிசி 1 கப்

வழிமுறைகள்

  1. களிமாவை மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் பொழுது உபயோகித்ததுக் கொள்ளலாம்.
  2. கனமான வாணலியில் 11/2 கப் தண்ணீரில் பொடித்த கருப்பட்டி சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
  3. கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி மறுபடியும் அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.
  4. கருப்பட்டித் தண்ணீர் கொதித்ததும் இரண்டு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும்.
  5. நல்லெண்ணெய் ஊற்றுவதால் களி கட்டி தட்டாது.
  6. கருப்பட்டித் தண்ணீர் கொதித்ததும் களி மாவைத் தூவிக் கிளறவும்.
  7. அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ளவும்.
  8. களி கையில் ஒட்டாமல் வெந்ததும் இறக்கி வைக்கவும்.
  9. வேறு ஒரு கிண்ணத்தில் மீதமுள்ள நல்லெண்ணெயில் ஒரு ஸ்பூன் விட்டு ஒரு கரண்டி களியைப் போடவும்.
  10. கிண்ணத்தை இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு சுற்றவும்.
  11. களி சுழலும் போது உருண்டையாக வந்து விடும்.
  12. மீதமுள்ள களியை ஒவ்வொரு முறையும் கிண்ணத்தில் நல்லெண்ணெய் விட்டு உருண்டையாக்கவும்.
  13. ஊட்டச்சத்து மிக்க சுவையும், மணமும் கொண்ட களி சாப்பிடத் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Sankari Satchu
Oct-27-2017
Sankari Satchu   Oct-27-2017

ருசியான ஆரோகியமான உணவு

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்