அம்ரிட்சாலி பருப்பு மகானி | Amritsari Dal Makhani in Tamil

எழுதியவர் Ritu Sharma  |  23rd Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • அம்ரிட்சாலி பருப்பு மகானி, How to make அம்ரிட்சாலி பருப்பு மகானி
அம்ரிட்சாலி பருப்பு மகானிRitu Sharma
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

6772

0

About Amritsari Dal Makhani Recipe in Tamil

அம்ரிட்சாலி பருப்பு மகானி recipe

அம்ரிட்சாலி பருப்பு மகானி தேவையான பொருட்கள் ( Ingredients to make Amritsari Dal Makhani in Tamil )

  • 3/4 கப் உளுந்து
  • 1 கப் வெங்காயம், பொடியாக நறுக்கியது
  • 2 பெரிய தக்காளி, மிகவும் பொடியாக நறுக்கியது
  • 1/2 கப் புதிய கிரீம்
  • 2 பச்சை மிளகாய் நறுக்கியது
  • 1 தேக்கரண்டி நெய்
  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி கொத்துமல்லி இலைகள் நறுக்கியது
  • 2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  • 1/2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 1/2 தேக்கரண்டி உலர் மாங்காய்த் தூள்
  • 1/2 தேக்கரண்டி மல்லித்தூள்
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1" இன்ச் இஞ்சி நறுக்கியது
  • தண்ணீர் தேவையான அளவு
  • சுவைக்கேற்ற உப்பு

அம்ரிட்சாலி பருப்பு மகானி செய்வது எப்படி | How to make Amritsari Dal Makhani in Tamil

  1. இரவு முழுவதும் உளுந்தை ஊறவைக்கவும். கூடுதல் தண்ணீரை வடிக்கட்டவும்.
  2. உளுந்து, 1/2 கப் வெங்காயம், இஞ்சி, உப்பு 2.5 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 15-20 நிமிடம் மிதமானச் சூட்டில் வேகவைக்கவும்.
  3. ஆவி வெளியேற அனுமதித்து கிரீமை பருப்பில் சேர்க்கவும். மேலும் 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  4. இன்னொரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி மீதமுள்ள வெங்காயம், இஞ்சிப்பூண்டு விழுது பச்சை மிளகாயைச் சேர்க்கவும். வெங்காயம் வெளுக்கும்வரை வதக்கவும்.
  5. தக்காளி சேர்த்து எண்ணெய் பக்கவாட்டில் வெளியேறும்வரை வதக்கவும்.
  6. மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உலர் மாங்காய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  7. தாளிப்பை பருப்பில் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  8. மேலே கிரீம் மற்றும் வெண்ணெய் தடவி இந்திய பிரெட்டுகளோடு பரிமாறவும்.

Reviews for Amritsari Dal Makhani in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.