வீடு / சமையல் குறிப்பு / கொள்ளு இட்லி

Photo of Horsegram idly by Natchiyar Sivasailam at BetterButter
880
4
0.0(0)
0

கொள்ளு இட்லி

Oct-28-2017
Natchiyar Sivasailam
960 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொள்ளு இட்லி செய்முறை பற்றி

கொளுத்தவனுக்குக் கொள்ளு என்பது பழமொழி. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் உணவில் அடிக்கடி கொள்ளைச் சேர்த்துக் கொள்ளலாம். சுவையும் ஆரோக்கியமும் மிகுந்தது கொள்ளு இட்லி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொள்ளு 1 கப்
  2. இட்லி அரிசி 1 கப்
  3. உளுந்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கொள்ளை சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. இட்லி அரிசியைக் கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
  3. உளுந்தம்பருப்பைக் கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  4. ஊறிய பிறகு மிக்சியில் அரிசியை அரைக்கவும்.
  5. அரைத்த அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
  6. கொள்ளோடு உளுத்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும்.
  7. அரைத்த கொள்ளு, உளுத்தம்பருப்பு மாவை அரிசி மாவோடு சேர்க்கவும்.
  8. தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
  9. எட்டு மணி நேரம் கழித்து மாவு பொங்கி வந்ததும் இட்லி வார்க்கவும்.
  10. பத்து நிமிடங்களில் கொள்ளு இட்லி தயாராகி விடும்.
  11. கத்திரிக்காய் கொத்சு, காரச் சட்னி, மிளகாய்ப் பொடியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்