Photo of Kalyana morkozhambu by Krishnasamy Vidya Valli at BetterButter
975
3
0.0(1)
0

Kalyana morkozhambu

Oct-29-2017
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் துருவல் - 1 / 2 cup
  2. பச்ச மிளகாய் நீளமானது - 2
  3. மிளகாய் வத்தல் - 1 அரைக்க 2 தாளிக்க
  4. கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
  5. சீரகம் - 1 தேக்கரண்டி
  6. தாளிக்க கடுகு-1தேக்கரண்டி உளுத்தம்பருப்பு-1தேக்கரண்டி கறிவேப்பிலை-2ஆர்க்கு கொத்தமல்லிஇலை-பொடியாக நறுக்கியது 1தேக்கரண்டி
  7. தேங்காய் எண்ணெய் - 3 தேக்கரண்டி
  8. உப்பு - 1 1 / 4 தேக்கரண்டி
  9. தயிர் - 2 cup ( சிலும்பல் இல்லாதவாறு )
  10. குழம்பில் போடுவதற்கு - தடியங்காய் /வெள்ளரி /வெண்டைக்காய் /பூசணிக்காய்/குடைமிளகாய் துண்டுகள் 1/2 cup
  11. காய்கள் இல்லாத நிலையில் பஜ்ஜி மிளகாய் கூட போடலாம்

வழிமுறைகள்

  1. கடலைப்பருப்பு சீரகம் பச்ச மிளகாயை இரண்டாக நறுக்கி ஒரு மிளகாய் வத்தல் சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்
  2. ஊறவைத்ததை தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக அரைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு மிளகாய் வத்தல் கருவேப்பிலை தாளித்து (மிளகாய் வத்தல் மட்டும் தனியாக எடுத்து வைக்கவும் ) காய் போட்டு வதக்கியபின் அரைத்த விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. தயிர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் அடுப்பைஅணைத்துவிடவும்
  5. எடுத்து வைத்த மிளகாய் வத்தல் கிள்ளிப்போட்டு கொத்தமல்லி இலை சேர்த்தால் கல்யாண மோர் குழம்பு தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Oct-29-2017
Pushpa Taroor   Oct-29-2017

Nice

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்