வீடு / சமையல் குறிப்பு / அரைத்துவிட்ட/அரைத்த சிக்கன் சூப்

Photo of Araithuvitta/Ground Chicken Soup by Priya Alagappan at BetterButter
3194
13
0.0(0)
0

அரைத்துவிட்ட/அரைத்த சிக்கன் சூப்

Jan-07-2016
Priya Alagappan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் எலும்புடன் - 250 கிராம்
  2. வெங்காயம்/சின்ன வெங்காயம் - 10
  3. கருமிளகு - 3 தேக்கரண்டி
  4. சீரகம் - 3 தேக்கரண்டி
  5. இஞ்சி - 1 சிறிய துண்டு
  6. பூண்டு - 3 துண்டுகள்
  7. தக்காளி - 1
  8. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  9. கொத்துமல்லி இலைகள் - அலங்கரிக்க
  10. சுவைக்கேற்ற உப்பு
  11. எள்ளு/நல்லெண்ணெய்- பதப்படுத்துதளுக்கு

வழிமுறைகள்

  1. இந்த காரசாரமான சூப்பைத் தயாரிக்க முதலில் மசாலாவை நாம் அரைத்துக்கொள்ளவேண்டும். இங்கே நான் பிளென்டரைப் பயன்படுத்தினேன், கிரைண்டர் வைத்துள்ளவர்கள் ( அம்மிக்கல் அல்லது ஆட்டுக்கல்), தயவுசெய்து அதைப் பயன்படுத்தவும், சுவை அலாதியாக இருக்கும்.
  2. அரைத்த சாந்தைத தயாரிக்க, கடாயை 1 தேக்கரண்டி எண்ணெயை சூடுபடுத்திக்கொள்ளவும், பிறகு கருமிளகு சீரகம் சேர்த்தும் அவற்றை பொரிக்கச் செய்யவும்.
  3. அதன்பிறகு நறுக்கப்பட்ட சின்ன வெங்காயம் சேர்க்கவும். மிகவும் மெலிதாக நறுக்கவேண்டியதில்லை, ஏனெனில் நாம் அதை அரைக்கத்தான் போகிறோம். நன்றாக வதக்கவும்.
  4. எடுத்து வைத்துக்கொள்க. இப்போது ஒரு பிளண்டரை எடுத்து வறுத்த சேர்வைப்பொருள்களை அவற்றில் சேர்த்து மென்மையான சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  5. சூப் தயாரிப்பதற்கு, சிக்கன் துண்டுகளை நன்றாகத் தண்ணீரில் கழுவிக்கொள்ளவும். தண்ணீரை வடிக்கட்டியபிறகு, நான் 1/4 தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து மீண்டும் தண்ணீர் விட்டு கழுவினேன். இப்படிச் செய்தால் பச்சை வாடையை தவிர்க்கலாம்.
  6. 2 தேக்கரண்டி நல்லெண்ணையுடன் குக்கரை சூடுபடுத்தி நசுக்கப்பட்ட இஞ்சி, பூண்டை சேர்க்கவும். இப்போது நறுக்கப்பட்ட தக்காளி, சிக்கன் துண்டுகள், மஞ்சள் தூள் சேர்த்து 1 நிமிடத்திற்கு வதக்கவும். அதன்பிறகு அரைத்த சாந்தைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  7. தேவையான தண்ணீர் உப்பு சேர்க்கவும். உப்பு சுவை சோதிக்கவும். விசிலுடன் மூடியிடவும். அதிக தீயில் அடுப்பில் வைக்கவும்.
  8. 2 விசிலுக்கு பிரஷர் குக்கரில் வேகவைத்து அதன்பிறகு தீயை அடக்கவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை நிறுத்தவும். பிரஷர் குறைந்ததும் மூடியைத் திறந்து காரசாரமான சூப்பை பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்.
  9. கொத்துமல்லி இலைகளைத் தூவி சூடாகப் பரிமாறுக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்