வீடு / சமையல் குறிப்பு / கோதுமை பீட்ரூட்- முட்டை மோமோஸ்

Photo of Whole wheat Beet - Egg Momos by Ayesha Ziana at BetterButter
1117
2
0.0(0)
0

கோதுமை பீட்ரூட்- முட்டை மோமோஸ்

Nov-09-2017
Ayesha Ziana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை பீட்ரூட்- முட்டை மோமோஸ் செய்முறை பற்றி

பீட்ரூட் மற்றும் கோதுமை மாவில் செய்த முட்டை மோமோஸ்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஸ்டீமிங்
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மேல்மாவு செய்ய: கோதுமை மாவு 1 கப்
  2. பீட்ரூட் ஜூஸ் 1/4 கப்
  3. உப்பு தேவைக்கு
  4. எண்ணெய் தேவைக்கு
  5. ஸ்டப்பிங் செய்ய: முட்டை 2
  6. வெங்காயம் 3/4 முதல் 1
  7. கேப்ஸிகம் 1/2
  8. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  9. மிளகு தூள் 1/2 ஸ்பூன்
  10. கரம் மசாலா 3/4 முதல் 1 ஸ்பூன்
  11. உப்பு தேவைக்கு
  12. எண்ணெய் தேவைக்கு

வழிமுறைகள்

  1. மேல் மாவு செய்ய: சிறிது பீட்ரூட்டை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டி, லேசாக கொதிக்க வைக்கவும். இது தான் பீட்ரூட் ஜூஸ். இதில் 1/4 கப் எடுத்து, கோதுமை மாவு, உப்பு சேர்த்து சிறிது சிறிதாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். இதை 15 நிமிடங்கள் மூடி வைக்கவும். மேல் மாவு தயார்.
  2. ஸ்டப்பிங் செய்ய: வாணலியில் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய கேப்ஸிகம், எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து லேசாக வதக்கவும். சுருள வதக்க தேவையில்லை.
  3. தேவையான உப்பு சேர்த்து, முட்டைகளை உடைத்து ஊற்றி, விடாமல் கிளறவும்.
  4. மிளகு தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி, முட்டை மசாலாவுடன் நன்றாக சேர்ந்ததும் அடுப்பை அணைத்து விடவும். ஸ்டப்பிங் தயார்.
  5. மோமோஸ் செய்ய: மேல்மாவில் இருந்து சப்பாத்திக்கு செய்வது போல் உருண்டை உருட்டி சப்பாத்தி போல் இடவும் . நடுவில் 1 டேபிள் ஸ்பூன் ஸ்டப்பிங் வைக்கவும்.
  6. சப்பாத்தியின் ஓரங்கள் முழுக்க தண்ணீர் தொட்டு தடவவும். பின்னர் புடவை கொசுவம் மடிப்பது மாதிரி மடித்து, நடுவில் ஒன்று சேரும் மாவை லேசாக அழுத்தவும்.
  7. இது மாதிரி எல்லா உருண்டைகளையும் செய்த பின்னர், இட்லி தட்டில் வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  8. சுவையான, ஆரோக்கியமான முட்டை மோமோஸ் தயார். இது குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக கொடுக்க ஏற்றது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்