வீடு / சமையல் குறிப்பு / பட்டர் குக்கீஸ்

Photo of Butter Cookies by Asiya Omar at BetterButter
372
4
0.0(0)
0

பட்டர் குக்கீஸ்

Nov-13-2017
Asiya Omar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பட்டர் குக்கீஸ் செய்முறை பற்றி

ஈசியாக வீட்டில் இருக்கும் மைதா,சீனி,வெனிலா எசன்ஸ், வெண்ணெய சேர்த்து செய்தால் ப்ரெஷ் குக்கீஸ் தயார்.

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெண்ணெய் -100கிராம்
  2. சீனி -50 கிராம்
  3. மைதா மாவு -1 கப்
  4. வெனிலா எசன்ஸ் - சில துளிகள்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை தயார் செய்யவும்.முதலில் பட்டர் ,பொடித்த சீனியை நன்கு பீட் செய்யவும்.
  2. சீனி நன்கு கரைய வேண்டும். வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.
  3. கலந்து விடவும்.மாவைச் சேர்க்கவும்.
  4. சப்பாத்தி மாவு போல் உருட்டி கொள்ளவும்.
  5. சிறிய உருண்டையாக பிரித்து தேவையான ஷேப் செய்து கொள்ளவும்.பேக்கிங் ட்ரேயை கிரீஸ் செய்து(மைதா வெண்ணெய் தடவவும்) பட்டர் குக்கீஸ் தயார் செய்த மாவு வடிவத்தை வைக்கவும்.
  6. எலெக்ட்ரிக் ஓவனை முற்சூடு செய்யவும்.150 டிகிரியில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
  7. கவனமாக ஓவனில் இருந்து எடுத்து ஆற வைக்கவும்.15 - 20 குக்கீஸ் வரும்.சுவையான பட்டர் குக்கீஸ் தயார்.டேஸ்ட் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் சாப்பிடத்தூண்டும்.
  8. விரும்பினால் பட்டர்,ஐசிங் சுகர் கொண்டு பீட் செய்து பைப்பிங் பேகில் போட்டு டெக்கரேட் செய்யலாம்.குட்டீஸ்கு ரொம்ப பிடிக்கும். ஜாம் கூட தடவி கொடுக்கலாம் சும்மாவே செமையாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்