வீடு / சமையல் குறிப்பு / தண்டு மற்றும் பழங்கள் சாலட்

Photo of Dhandu and Fruits Salad by Panchavarnam Ramasamy at BetterButter
963
2
0.0(0)
0

தண்டு மற்றும் பழங்கள் சாலட்

Nov-15-2017
Panchavarnam Ramasamy
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தண்டு மற்றும் பழங்கள் சாலட் செய்முறை பற்றி

வாழைத்தண்டு மற்றும் பழங்கள் கலந்த சாலட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைத்தண்டு மூன்று இன்ச் அளவு
  2. ஆபபிள். அரைப்பழம்
  3. மாதுளை அரைப்பழம்
  4. ஆரஞ்சு அரைப்பழம்
  5. கொய்யா. அரைப்பகுதி(காயாகவும் இல்லாமல் பழமாகவும் இல்லாமல் நடுத்தரமாக இருக்க வேண்டும்)
  6. திராட்சை ஒரு கொத்து சிறியது
  7. வெள்ளரி. அரைக்காய்
  8. பாசிப்பருப்பு இரண்டு ஸ்பூன்
  9. எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன்
  10. இஞ்சி. சிறிதளவு
  11. மல்லித்தழை
  12. கறிவேப்பிலை
  13. உப்பு தேவையான அளவு
  14. பச்சை மிளகாய் பாதி அளவே போதும்
  15. திராட்சை ஒரு கொத்து(

வழிமுறைகள்

  1. பாசிப்பருப்பை நீரில் அலசி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. வாழைத்தண்டைப்பொடிப்பொடியாக நறுக்கி நாரினை சுத்தம் செய்து மோரில் ஊற வைக்கவும்.
  3. ஆப்பிள் ,கொய்யா, வெள்ளரி ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
  4. மாதுளையை உடைத்து முத்துக்களைத்தனித்தனியே எடுத்து வைக்கவும்.
  5. ஆரஞ்சுப்பழத்தைத்தோல் நீக்கி சுத்தம் செய்து சுளைகளை துண்டுகளாக்கி வைக்கவும்.
  6. திராட்சையை உதிரியாகப் பிரித்து நீரில் அலசி வைக்கவும்.
  7. பச்சை மிளகாய் , கறி வேப்பிலை ,மல்லித்தழை, இஞ்சி ஆகியவற்றைப்பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்.
  8. பாசிப்பருப்பு ஊறிய பின்பு நீரை வடித்து வைக்கவும்.
  9. நறுக்கிய தண்டு ,ஊறிய பாசிப்பருப்பு ,தேவையான உப்பு ,ஒரு ஸ்பூன் எலுமிச்சைசாறு ஆகியவற்றைச்சேர்த்து கலக்கவும்.
  10. வெட்டி வைத்த பச்சை மிளகாய் ,இஞ்சி மல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்துக்கலக்கவும்.
  11. இறுதியாக வெட்டி வைத்த ஆப்பிள் ,கொய்யா, வெள்ளரி ,மாதுளை முத்துக்கள் ஆகியவற்றையும் சேர்த்துக்கலக்கவும்.
  12. இப்பொழுது தண்டு மற்றும் பழங்கள் சாலட் தயார்.
  13. இந்த சாலட்டை குழந்தைகளுக்குக்கொடுக்கும் முன்பு ப.மிளகாய், இஞ்சி ஆகிய துண்டுகளை ஒரு ஸ்பூனால் எடுத்து விடவும்.
  14. பழ வகைகளைச்சாப்பிட விரும்பாத குழந்தைகள் கூட விரும்பிச்சாப்பிடுவர்.
  15. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளின் உடலுக்கு நல்லது.
  16. இதனை அடுப்பில் வைத்து சமைக்கும் வேலையே இல்லை.
  17. தேவைப்பட்டவர்கள் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கலக்கிக்கொள்ளலாம்.
  18. இதனைச்சாப்பிடும் குழந்தைகளுக்கு சாப்பிட்ட அரை மணி நேரத்திலேயே பசி எடுக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்