வீடு / சமையல் குறிப்பு / வீட்டில் தயாரிக்கப்பட்ட நன்னாரி சாற்றைப் பயன்படுத்தி நன்னாரி (சரசபரில்லா) சர்பத்

Photo of Nannari(sarasaparilla) Sarbath using Homemade Nannari Syrup by Rathy V at BetterButter
1450
13
4.0(0)
0

வீட்டில் தயாரிக்கப்பட்ட நன்னாரி சாற்றைப் பயன்படுத்தி நன்னாரி (சரசபரில்லா) சர்பத்

Jan-14-2016
Rathy V
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. நன்னாரி சாறுக்காக:
  2. நன்னாரி வேர்கள் - 50 கிராம் (1/2 கப்)
  3. சர்க்கரை - 250 கிராம் (1 கப்)
  4. தண்ணீர் - 2 1/2 கப்
  5. எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
  6. சர்பத்துக்கு:
  7. நன்னாரி சாறு - 2-3 தேக்கரண்டி
  8. குளிர்ச்சியான தண்ணீர் - 1 கிளாஸ்
  9. ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
  10. எலுமிச்சை சாறு - ஒரு எலுமிச்சையின் கால் பங்கிகுதியிலிருந்து (அல்லது தேவைக்கேற்ப அதிகமாக)

வழிமுறைகள்

  1. முதலில், நன்னாரி சாறுக்காக, நன்னாரி வேர்களை தண்ணீரைக் கொண்டு 2 அல்லது 3 முறைகள் நன்றாகச் சுத்தப்படுத்தவும், மண்ணை நீக்குவதற்கு.
  2. ஒரு செய்தித்தாளில் 15 நிமிடங்களுக்கு ஈரப்பதம் போகும்வரை உலர வைக்கவும்.
  3. குழவியைக்கொண்டு வேர்களை நசுக்கவும், அப்போதுதான் தளர்வடையும். வேர்களைப் பிளந்து உள்ளே இருக்கும் வெள்ளைப் பகுதியை நீக்கவும். அனைத்து வேர்களில் இருந்தும் பழுப்பு பகுதிகளை சேகரிக்கவும்.
  4. இதை ஒரு மிக்சரில் போட்டு ஒன்றல்லது இரண்டு முறைகள் மேலும் உடைப்பதற்காக ஓட்டவும். அரைக்கவேண்டாம்.
  5. குமிழ்கள் தோன்றத் துவங்கும்வரை தண்ணீரை கொதிக்க விடவும். நிறுத்திவிட்டு வேர்களைச் சேர்த்து ஒரு மூடியால் மூடவும். இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும்.
  6. அதன்பிறகு, ஒரு மஸ்லின் துணியை இரண்டாக மடித்து ஊறிய சாறை வடிக்கட்டவும். சர்க்கரை சேர்த்து அது கரையும்வரை கலக்கவும்.
  7. இப்போது சாறை சூடுபடுத்தவும், கம்பி போன்ற பதம் வரும்வரையில். 20 நிமிடங்கள் ஆகலாம்.
  8. அப்படிச் செய்ததும், நிறுத்திவிட்டு (சாறு தேன் பதத்திற்கு இருக்கும்) முழுமையாக ஆறட்டும். இப்போது 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஒரு சுத்தமானப் பாத்திரத்தில் சேமித்து, பிரிஜில் வைக்கவும்.
  9. சர்பத்திற்கு, ஒரு கிளாசில், 2 அல்லது 3 தேக்கரண்டி சாறு எடுத்து, குளிர்ச்சியான தண்ணீர், ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். எலுமிச்சைச் சாறைச் சேர்த்து கலந்து பரிமாறுக! சுவர்க்கமாக இருக்கும் என்பேன்!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்