வீடு / சமையல் குறிப்பு / கம்பு அல்வா

Photo of Bajira Halwa by Saivardhini Badrinarayanan at BetterButter
522
3
0.0(0)
0

கம்பு அல்வா

Nov-17-2017
Saivardhini Badrinarayanan
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கம்பு அல்வா செய்முறை பற்றி

ஆரோக்கியமான குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு 1 கப்
  2. சக்கரை 1 கப்
  3. நெய் 4 மேஜைக்கரண்டி
  4. முந்திரி பருப்பு சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் கம்பு நன்கு சுத்தம் செய்து 8 மணிநேரம் வைக்கவும்.
  2. நன்கு ஊறிய பின் ஒரு மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைக்கவும்.
  3. அரைத்த கம்பு மாவை ஒரு வடிகட்டில் நன்கு வடிகட்டவும்.
  4. ஒரு கடாயில் நெய் 1 மேஜைக்கரண்டி சேர்த்து முந்திரி பருப்பை நன்கு பொன் நிறமாக வறுக்கவும்.
  5. அதே கடாயில் வடிகட்டி எடுத்த கம்பு பாலை சேர்த்து நன்கு கலந்து கொண்டே இருக்கவும்.
  6. நன்கு பச்சை வாடை போகும் வரை கைவிடாமல் கிளறவும்.
  7. பின் 1 கப் சக்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
  8. பின் நெய் சேர்த்து கிளறவும்.
  9. நெய் பிரிஞ்சு கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளற வேண்டும்.பின் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்