Photo of Mughalaya potato Kurma.. by Karuna pooja at BetterButter
1510
5
0.0(1)
0

Mughalaya potato Kurma..

Nov-19-2017
Karuna pooja
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Mughalaya potato Kurma.. செய்முறை பற்றி

முகலாய முறைபடி உருளை குருமா.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • முகலாய்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உருளை கிழங்கு 1/4 கிலோ
  2. பெரிய வெங்காயம் 100 கிராம்
  3. பச்சை மிளகாய் 3
  4. மல்லி இலை சிறிது
  5. இஞ்சி பூண்டு விழுது 1 மேசைக்கரண்டி
  6. எண்ணெய் 3 மேசை கரண்டி
  7. பிரிஞ்சி இலை 1
  8. பட்டை 1
  9. கிராம்பு 3
  10. ஏலக்காய் 3
  11. தேங்காய் விழுது சிறிது
  12. கரம்மசால பொடி சிறிது
  13. சீரகப்பொடி ¼ ஸ்பூன்
  14. மல்லி பொடி 1 மேசைக்கரண்டி
  15. மிளகாய்த்தூள் 1/2 மேசைக்கரண்டி
  16. மஞ்சள் சிறிது
  17. தயிர் 1/2 கப்
  18. உப்பு

வழிமுறைகள்

  1. எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் ,பிரிஞ்சி இலை இவற்றை பொறிய விடவும்.
  2. பின்னர் பச்சைமிளகாய் , பெரிய வெங்காயம் இவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.... பொன்னிறமாக ..
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பொடி வகைகள் சேர்த்து நன்கு வதக்கவும்.. 1 ½ " அளவுள்ள துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள உருளை கிழங்கு சேர்த்து வதக்கவும்.
  5. தேவையான அளவு தண்ணீரில் மூடி வேகவிடவும். பாதி வேந்ததும் உப்பு சேர்த்து வேகவிடவும்.
  6. பின்னர் தயிரை அடித்து இதனுடன் சேர்க்கவும் .... மிதமான தீயில்..
  7. 5 நிமிடங்கள் கழித்து தேங்காய் விழுது ,மல்லி இலை சேர்த்து மூடி 3 நிமிடங்கள் கழித்து திறந்தால் குருமா தயார்....

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pradeep Kumar
Feb-11-2018
Pradeep Kumar   Feb-11-2018

Authentic taste

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்