வீடு / சமையல் குறிப்பு / நெஞ்செலும்பு சூப்/மட்டன் மாறெலும்பு சூப்

Photo of Nenju Elambu Soup / Lamb Rib Bone Soup by Preeti Tamilarasan at BetterButter
2388
55
5.0(0)
0

நெஞ்செலும்பு சூப்/மட்டன் மாறெலும்பு சூப்

Jan-18-2016
Preeti Tamilarasan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 200 கிராம் நெஞ்செலும்பு
  2. 1 நடுத்தர அளவுள்ள வெங்காயம் - நறுக்கப்பட்டது
  3. 2 தக்காளி - நறுக்கப்பட்டது
  4. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  5. 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  6. 1 அல்லது 2 தேக்கரண்டி மிளகுத்தூள்
  7. 1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
  8. 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  9. 1/2 தேக்கரண்டி மல்லித்தூள்
  10. 4 கப் தண்ணீர்
  11. 1 தேக்கரண்டி நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகள்
  12. 1 தேக்கரண்டி கடுகு
  13. 3 காய்ந்த மிளகாய்
  14. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. மாறெலும்பை சுத்தப்படுத்திக் கழுவவும். மஞ்சள் தூளுடன் மேரினேட் செய்து 10 நிமிடங்கள் எடுத்து வைக்கவும். மீண்டும் கழுவி எடுத்து வைக்கவும். 2 தேக்கரண்டி எண்ணெயை ஒரு பிரஷர் குக்கரில் சூடுபடுத்தவும். கடுகு, பெருஞ்சீரகம், 5-8 கறிவேப்பலையை வதக்கவும். பிய்த்த சிவப்பு மிளகாயைச் சேர்க்கவும்.
  2. நன்றாகக் கலக்கி நறுக்கப்பட்ட வெங்காயம், இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். தக்காளியைச் சேர்த்து நசுக்கிக்கொள்ளவும், அதன்பிறகு ஆட்டிரைச்சி மாறெலும்பு, மஞ்சள் தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், மல்லித்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.
  3. தண்ணீர் சேர்த்து, சுவைக்கு உப்பையும் சேர்த்துக்கொள்க. மூடியிட்டு பிரஷர் குககரில் 11-13 விசில்களுக்கு வேகவைக்கவும்.
  4. தீயிலிருந்து எடுத்து பிரஷர் அடங்கவிடவும். கொத்துமல்லி இலைகள் சேர்த்து உப்புக்காரம் சரிபார்க்கவும்.
  5. சூடாகப் பரிமாறி மகிழவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்