வீடு / சமையல் குறிப்பு / மாதுளை உலர் பழ புலாவ்

Photo of Pomegranate and dry fruit Pilaf by Shaheen Ali at BetterButter
2682
119
4.2(0)
0

மாதுளை உலர் பழ புலாவ்

Jan-19-2016
Shaheen Ali
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முழு அரிசி - 250 கிராம்
  2. வெங்காயம் - 1 பெரியது நறுக்கப்பட்டது
  3. பிரிஞ்சி இலை - 1
  4. ஏலக்காய் - 2
  5. இலவங்கப்பட்டை - 1 இன்ச் குச்சி
  6. கிராம்பு - 4
  7. ஜாதிக்காய் மேலோடு - 1 சிட்டிகை
  8. நட்சத்திர சோம்பு - 2
  9. நெய் - 2 தேக்கரண்டி
  10. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
  11. உப்பு தேவையான அளவு
  12. பாதாம் பருப்பு - 8
  13. உலர் திராட்சை - 1/2 கப்
  14. முந்திரி பருப்பு - 10
  15. மாதுளம் பழ விதைகள் - 1/2 கப்
  16. பன்னீர் தண்ணீர் - 1 தேக்கரண்டி
  17. குங்குமப்பூ - 1 சிட்டிகை
  18. பால் - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. 1. முதலில் அரிசியைக் கழுவி போதுமானத் தண்ணீரில் 30 நிமிடங்கள் சமைப்பதற்கு முன் ஊறவைக்கவும். இதற்கிடையில் குங்குமப்பூவை 2 தேக்கரண்டி பாலில் ஒரு சிறிய பாத்திரத்தில் ஊறவைத்து பிரிஜ்ஜில் எடுத்து வைக்கவும்.
  2. 2. ஒரு வானலியில் எண்ணெயைச் சூடுபடுத்தி வெங்கயாத் துண்டுகளைப் பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும். அதே நெய்யில் உலர் திராட்சை, பாதாம், முந்திரி பருப்புகளை வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. 3. ஒரு அகலமான பாத்திரத்தில் இரட்டிப்பு மடங்கு அரிசியில் இரட்டிப்பு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். எலுமிச்சை சாறு, உப்பு, ஒட்டுமொத்த மசாலாவையும் அதில் போடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ஊறவைத்த அரிசியை அதில் போட்டு வேகவைக்கவும். இது 5-6 நிமிடங்கள் பிடிக்கும்.
  4. 4. தண்ணீரை வடிக்கட்டி அரிசியை ஒரு அரிசி வடிக்கட்டியால் வடிக்கட்டவும். அரிசியை ஒரு அகமான டிரேக்கு மாற்றி குங்குமப்பூ பாலை அதன் மீதுப் பரவச்செய்யவும். இப்போது வறுத்த உலர் திராட்சை, பன்னீர் தண்ணீர் சேர்த்து அலுமினிய தாளால் முடி சில நிமிடங்கள் வைக்கவும்.
  5. 5. மாதுளம்பழ விதைகளையும் வறுத்த வெங்காயத்தையும் பரிமாறுவதற்கு முன் தாராளமாகச் சேர்க்கவும்.
  6. உங்களுக்குப் பிடித்தமானக் குழம்புடனோ அல்லது சில சுவையான ரைத்தாவுடனோ சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்