ஃப்ரைட் ரைஸ் | Fried rice in Tamil

எழுதியவர் Rabia Hamnah  |  28th Nov 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • ஃப்ரைட் ரைஸ், How to make ஃப்ரைட் ரைஸ்
ஃப்ரைட் ரைஸ்Rabia Hamnah
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

9

0





ஃப்ரைட் ரைஸ் recipe

ஃப்ரைட் ரைஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make Fried rice in Tamil )

  • பொடியாக நறுக்கிய கேரட் - 2
  • பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 15
  • பொடியாக நறுக்கிய கோஸ் - 1 கப்
  • குடை மிளகாய் -1
  • பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 ஸ்பூன்
  • பொடியாக நறுக்கிய பூண்டு - 10 பல்
  • நீளமாக நறுக்கிய பல்லாரி - 1
  • பாஸ்மதி அரிசி - 1/2 கி
  • எண்ணெய் - தாளிக்க
  • சோயா சாஸ்- 1டேபிள் ஸ்பூன்
  • மிளகு தூள் - காரத்திற்க
  • உப்பு-தேவைக்கு
  • சீனி-1/2 ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு- 1 டேபிள்ஸ்பூன்
  • முட்டை-1

ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி | How to make Fried rice in Tamil

  1. முதலில் அரிசியைஉப்பு, கொஞ்சம் எண்ணெய் சேர்த்து உதிரியாக வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.
  3. அதன் பின்னர் பல்லாரி, கேரட், பீன்ஸ் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தொடர்ந்து கோஸ் பின்னர் குடை மிளகாய் சேர்க்கவும்.
  4. காய்கறிகள் முக்கால் வேக்காடு வெந்தால் போதுமானது. உப்பு,சீனி சேர்க்கவும். சோயா சாஸ் சேர்க்கவும்.
  5. முட்டையுடன் உப்பு மிளகுத்தூள் சேர்த்து அடித்து அதை சேர்த்து நன்றாக கிளறவும்.
  6. அத்துடன் வேக வைத்த சாதத்தை சேர்த்து சிறிது மிளகு தூள் துவி இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி விடவும். வெஜ் ஃப்ரைட் ரைஸ் தயார்..

Reviews for Fried rice in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.