வீடு / சமையல் குறிப்பு / கிரிஸ்துமஸ் பிளம் கேக் - பாரம்பரியத்தின் விருந்து

Photo of Christmas Plum Cake - Treat from generations! by Kriti Singhal at BetterButter
2185
154
4.5(0)
2

கிரிஸ்துமஸ் பிளம் கேக் - பாரம்பரியத்தின் விருந்து

Jan-20-2016
Kriti Singhal
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
100 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • கடினம்
  • கிறிஸ்துமஸ்
  • ஐரோப்பிய
  • பேக்கிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. உலர் பழ சம்பிரதாயத்திற்காக - நான் 9 உலர் பழங்கள் பயன்படுத்தினேன், குருதிநெல்லி, அவுரிநெல்லி, உலர் திராட்சை, கருப்பு உலர் திராட்சை, சுல்தானாக்கள், ஆப்ரிகாட்கள், அத்திகள், செர்ரிகள், பேரிச்சம் பழங்கள். ஒரு கிளாஸ் ஜாரில் மெக்டோனால்ட் மற்றும் ஓல்ட் மங்க் ரம் கலவையில் ஊறவைக்கவும். அவற்றை ஒரு இருட்டு கப்போர்டில் அறை வெப்பத்தில் மட்டும் வைக்கவும். இந்தக் கலவையை உங்கள் விருப்பப்படி செய்துகொள்ளலாம், 4 மாதங்களுக்கு முன்பே கூட செய்துகொள்ளலாம்.
  2. மசாலா கலவைக்கு - 1 தேக்கரண்டி இலவங்கத்தூள்
  3. 1 தேக்கரண்டி ஜாதிக்காய்த்தூள்
  4. 1/2 தேக்கரண்டி இஞ்சித் தூள்
  5. 1/2 தேக்கரண்டி கிராம்புத் தூள்
  6. 1/2 தேக்கரண்டி ஏலக்காய்த் தூள்
  7. 1/2 தேக்கரண்டி கருப்பு ஏலக்காய் அல்லது பெரிய ஏலக்காய்த்தூள்
  8. கேரமெல்லுக்கு - 1 கப் சர்க்கரை
  9. 1 தேக்கரண்டி தண்ணீர்
  10. 1 தேக்கரண்டி தண்ணீர்
  11. 3/4 கப் சூடான கொதி நீர்
  12. கேக்கிற்கு - 100 கிராம் வெண்ணெய் (நான் அமுல் உப்பிடப்படாத வெண்ணெய் பயன்படுத்தினேன்)
  13. 1.5 கப் ஐசிங் சர்க்கரை
  14. 3 முட்டைகள் (வெ ள்ளைக் கரு பிரிக்கப்பட்டது)
  15. 1.5 கப் மைதா
  16. 1 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  17. 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா
  18. 1 கப் பொடி செய்யப்பட்ட பாதாம் முந்திரி பருப்புகள்
  19. 6 தேக்கரண்டி ஆரஞ்சு மர்மலாத் (நான் எளிய கிஷன் வகையைப் பயன்படுத்தவும்)
  20. 2 தேக்கரண்டி பொடிசெய்யப்பட்ட சர்க்கரை குருணைகள்

வழிமுறைகள்

  1. APF, மசாலா கலவை, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடாவைச் சலித்துக்கொள்ளவும். குறைந்தபட்சம் 4-5 முறை சலித்துக்கொள்ளவும். உங்கள் கேக் டின்னில் நெய் தடவி, பார்ச்மெண்ட் பேப்பரால் மூடவும்.
  2. கேரமல் பாகு - ஒரு பாத்திரத்தில் 1 தேக்கரண்டி தண்ணீரோடு சர்க்கரையை சூடுபடுத்தவும். சிம்மில் மெதுவாகச் செய்யவும். அதன் நிறம் மாறும்போது, மெதுவாகக் கலக்கிக்கொள்ளவும். அடர் கருப்பு நிறத்திற்க மாறும்வரை கேசில் இருக்கட்டும். அப்படிச்செய்ததும், கேசிலிருந்து எடுத்து கவனமாக சூடானக் கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.
  3. நீங்கள் உறவைத்தப் பழங்களை எடுத்து கூடுதல் ரம்மை வடிக்கட்டவும். இப்போது புதிய டூட்டி ப்ரூட்டி, பொறபொறப்பாகப் பொடிசெய்யப்பட்ட பாதாம் முந்திரி பருப்புகளை மொறுமொறுப்புக்காகச் சேர்க்கவும். 3 தேக்கரண்டி மாவைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  4. உங்கள் ஓவனை 140 டிகிரிக்கும் ப்ரீ ஹீட் செய்துகொள்ளவும். வெண்ணெயையும் ஐசிங் சர்க்கரையையும் ஒன்றாக மென்மையாக அடித்துக்கொள்ளவும். முட்டைக்கருக்களை ஒரு சமயத்தில் ஒன்றைச் சேர்த்து சற்றே அடித்துக்கொள்ளவும். இப்போது உலர் சேர்வைப்பொருள்கைள மடித்து மெதுவாக நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  5. பொடி செய்யப்பட்ட சிவப்பு பாதாம் முந்திரிகளைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். வெண்ணிலா எசென்ஸ், ஆரஞ்சு மர்மலாத், கேரமெல் பாகைச் சேர்க்கவும். அவற்றை நன்றாகக் கலந்துகொள்ளவும். சில நிமிடங்கள் விட்டுவைக்கவும்.
  6. இப்போது முட்டையின் வெள்ளைக் கருவை ஒரு தனி கிண்ணத்தில் எடுத்து அடிக்க ஆரம்பிக்கவும். மென்மையான கூம்புகள் அதில் தோன்றும்வரை அடிக்கவும். இப்போது பொடிசெய்யப்பட்ட சர்க்கரை குருணைகளைச் சேர்த்து பளபளப்பானக் கூம்புகள் தோன்றும்வரை அடித்துக்கொள்ளவும். உங்கள் கேக் மாவில் மெதுவாக மடித்துக்கொள்ளவும். மாவை தயாரித்து வைத்துள்ள டின்னில் ஊற்றி 140 டிகிரிக்கு பேக் செய்யவும்.
  7. வெந்ததும், 15 நிமிடங்கள் ஓவனுக்கு வெளியே ஆறவிடவும். ஒரு ஒயர் ரேக்கில் கேக்கைத் திருப்பி குறைந்தது 20 நிமிடங்கள் ஆறவிடவும். ஆறியதும், கேக்கைச் சுற்றி ரம்மை பிரஷ் செய்து அலுமினிய ஃபாயிலால் மூடவும். முறையாக மூடி காற்றுப்புகாத பாத்திரத்தில் இருட்டான இடத்தில் வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்