வீடு / சமையல் குறிப்பு / ஹைத்ராபாத் மட்டன் தம் பிரியாணி

Photo of Hyderabadi Mutton Dum ki Biryani by Shaheen Ali at BetterButter
3743
336
4.8(0)
0

ஹைத்ராபாத் மட்டன் தம் பிரியாணி

Jan-20-2016
Shaheen Ali
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஹைதராபாத்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மட்டன் - 1 கிலோ (வெட்டிக் கழுவப்பட்டது)
  2. புதிய தேங்காய் - 1/2 கப் (துருவப்பட்டது)
  3. மல்லித்தூள் - 4 தேக்கரண்டி
  4. தயிர் - 1 கப்
  5. புதினா - 1/2 கப்
  6. கொத்துமல்லி - 1/2 கப்
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் - 1 1/2 கப்
  9. பிரிஞ்சி இலை - 4
  10. பச்சை ஏலக்காய் - 6
  11. கருப்பு ஏலக்காய் - 4
  12. கருமிளகு - 1 தேக்கரண்டி
  13. கிராம்பு - 1 தேக்கரண்டி
  14. நட்சத்திர சோம்பு - 4
  15. ஜாதிக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
  16. ஷாஹி சீரகம் - 1 தேக்கரண்டி
  17. ஜாதிக்காய் மேலோடு - 1தேக்கரண்டி
  18. இலவங்கப்பட்டை -1 1/2 குச்சி
  19. புதினா - 1/2 கப் (நறுக்கப்பட்டது)
  20. கொத்துமல்லி - 1/2 கப் (நறுக்கப்பட்டது)
  21. எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அதனால் ஒரு கனமான அடிப்பாகமுள்ள அகலமாக பாத்திரமான ஹேண்டியில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும்.
  2. இப்போது மட்டன் துண்டுகள், தயிர் ஆகியவற்றைப் பிளந்த பச்சை மிளகாய், துருவியத் தேங்காயோடுச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். சிறிது நேரத்திற்குப் பிறகு தயிரிலிருந்து தண்ணீர் பிரிவதைப் பார்ப்பீர்கள். இப்போதுதான் மட்டன் மிருதுவாகும்வரை நீங்கள் வேகவைக்கவேண்டும்.
  3. மட்டன் வெந்ததும், மல்லித்தூள் உப்பு உங்கள் சுவைக்கற்ற அளவு சேர்த்து உயர் தீயில் நன்றாக வறுத்துக்கொள்ளவும். அங்குமிங்கும் எண்ணெய் பிரிந்து வருவதைப் பார்ப்பீர்கள். யாக்னிக்கு எண்ணெய் போதுமானதாக இருக்கிறதாக என்று பார்த்துக்கொள்ளவும். குறைவாக இருக்கக்கூடாது.
  4. அரிசியைச் சமைக்கவிருக்கும் இன்னொரு கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அரிசியை விட இரட்டிப்பு மடங்கு தண்ணீரைச் சேர்த்து அதைக் கொதிக்கவிடவும்.
  5. தண்ணீர் கொதிவிட ஆரம்பித்ததும், அரிசியை அதில் போட்டு அரிசி 3/4 பாகம் ஆகும் வரை வேகவைக்கவும். உங்கள் விரல்களால் அழுத்தி அரிசியை சோதித்துப் பார்க்கலாம். இப்போது அரிசி 1/4 பங்கு வேகாமல் விட்டுவைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அது பிரியாணிக்காகச் சேர்க்கும்போது வெந்துவிடும் என்பதால்.
  6. ஒரு மொத்தமானத் தட்டையான இரும்புத் தவாவை எடுத்து அடுப்பில் வைத்துச் சூடுபடுத்தவும். இன்னொரு கனமானப் பாத்திரத்தைத் தவாவின் மீது வைக்கவும்.
  7. அடியில் யாக்கினி தம் செய்யும்போதும் கருகிடாமல் இருக்கக் கொஞ்சம் தயிரைத் தெளித்துக்கொள்ளவும்.
  8. பாத்திரத்தின் அடிப்பாகத்தில் சமமாக யாக்கினியைப் பரப்பிக்கொள்ளவும்.
  9. இப்போது எலுமிச்சைச் சாறை அரிசி மீது சேர்த்து, குங்குமப்பூ பாலைப் பரவச் செய்யவும் (ஒரு சிட்டிகை குங்குமப்பூவை 1/2 கப் பாலில் 30 நிமிடங்களுக்கு பிரிஜ்ஜில் ஊறவைக்கவும்)
  10. பன்னீரைத் தெளித்து பிளந்த பச்சை மிளகாயை அங்குமிங்கும் பரப்பவும்.
  11. இப்போது நறுக்கிய புதினா, கொத்துமல்லி, கொஞ்சம் அதிகமாக வறுத்த வெங்காயம் சேர்த்து பாத்திரத்தை அலுமினியத் தாளினால் முறையாக அனைத்துப் பக்கங்களையும் சீல் வைக்கவும்.
  12. பிரியாணி வெந்ததும், தாளை நீ்க்கிவிட்டு அரிசியை ஒரு பக்கத்திலிருந்து வெட்டி மெதுவாக கிளரவும், யாக்கினியும் அரிசியும் சமமாகக் கலந்து அரிசி உடையாமல் இருப்பதற்காக.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்