வீடு / சமையல் குறிப்பு / பல்கர் கோதுமை சர்க்கரைப் பொங்கல்

Photo of Bulgur Wheat Sweet Pongal by Pavithira Vijay at BetterButter
3094
53
4.0(0)
0

பல்கர் கோதுமை சர்க்கரைப் பொங்கல்

Jan-20-2016
Pavithira Vijay
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • டயாபடீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 1 1/2 கப் பல்கர் கோதுமை (உடைத்த கோதுமை/டாலியா)
  2. 1/2 கப் மஞ்சள் பாசிப்பருப்பு
  3. 2 கப் வெல்லம்
  4. 2-3 தேக்கரண்டி நெய்
  5. 12-15 முந்திரி பருப்பு
  6. 2 தேக்கரண்டி உலர் திராட்சை
  7. 1/4 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
  8. 4 1/2-5 கப் தண்ணீர்

வழிமுறைகள்

  1. முந்திரி பருப்பை ஒரு நிமிடம் அல்லது முந்திரிபருப்பு பொன்னிறமாக மாறும்வரை வறுக்கவும்.
  2. அதன்பிறகு உலர் திராட்சைகளைச்சேர்த்து அவை உப்பும்வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
  3. பல்கர் கோதுமையையும் பாசிப்பருப்பையும் நன்றாகக் கழுவி பிரஷர் குக்கரில் 2-3 விசில்களுக்கு வேகவைக்கவும்.
  4. வெல்லத்தை நன்றாக உடைக்கவும்/நசுக்கவும்.
  5. கனமாக அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீரை சூடுபடுத்தி அதில் வெல்லத்தை சேர்க்கவும், அது கறையட்டும்.
  6. கொதிநிலைக்கு கொண்டுவந்து ஏலக்காய்தூளையும் வேகவைத்த கோதுமை-பருப்புக் கலவையைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  7. இப்போது அரிசியும் வெல்லச்சாறும் நன்றாகக் கலந்திருக்காது. 4-5 நிமிடங்கள் நடுத்தரம் முதல் குறைவானத் தீயில் வேகவைக்கவும்.
  8. நெய் மற்றும் உலர் பழங்களைச் சேர்த்து மேலும் 5-6 நிமிடங்கள் வெல்லமும் அரிசியும் ஒன்றாகக் கலக்க வேகவைக்கவும், பொங்கல் அடர்த்தியாக மாறும்.
  9. அடுப்பை நிறுத்திவிட்டு தேவைப்பட்டால் மேலே கொஞ்சம் நெய் விடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்