பன்னீர் பட்டர் மசாலா | Paneer Butter Masala in Tamil

எழுதியவர் Pavithira Vijay  |  20th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • பன்னீர் பட்டர் மசாலா, How to make பன்னீர் பட்டர் மசாலா
பன்னீர் பட்டர் மசாலாPavithira Vijay
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

8344

0





பன்னீர் பட்டர் மசாலா recipe

பன்னீர் பட்டர் மசாலா தேவையான பொருட்கள் ( Ingredients to make Paneer Butter Masala in Tamil )

  • 225 கிராம் பன்னீர் (காட்டேஜ் வெண்ணெய்)
  • 2 தேக்கரண்டி வெண்ணெய்
  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • 3 கிராம்பு
  • 3 பச்சை ஏலக்காய்
  • 2 ஜாதிக்காய்
  • 1 நடுத்தர அளவுள்ள வெங்காயம் (அரைத்துச் சாந்தாக்கப்பட்டது)
  • 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  • 3-4 நடுத்தர அளவுள்ள தக்காளி (சாந்து)
  • 6-7 முந்திரி பருப்பு (ஊறவைத்து அரைத்தது)
  • 1 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள் (அல்லது உங்கள் ருசிக்கேற்ற அளவு)
  • 1 தேக்கரண்டி மல்லித்தூள்
  • ஒரு சிட்டிகை மஞ்சள்தூள்
  • தேவையான அளவு உப்பு
  • 3/4 தேக்கரண்டி சர்க்கரை
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1 தேக்கரண்டி நசுக்கிய கஸ்தூரி வெந்தயம்
  • 1-2 தேக்கரண்டி புதிய கிரீம்

பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி | How to make Paneer Butter Masala in Tamil

  1. பாத்திரத்தில் வெண்ணெயைத் தடவி பன்னிரைத் தொகுப்பை பொன்னிற புள்ளிகள் தோன்றும்வரை பன்னீர் மிருதுவாகும்வரை வறுக்கவும். திருப்பிப்போட்டு அடுத்தப்பக்கத்திற்கும் அப்படியே செய்யவும். சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தேவைப்படும்வரை எடுத்து வைக்கவும்.
  2. அதே பாத்திரத்தில் அதிகமாக வெண்ணெயும் கொஞ்சம் எண்ணெயும் சேர்த்து வெண்ணெய் உருகியதும், ஏலக்காய், கிராம்பு, ஜாதிக்காய் சேர்க்கவும். அதன்பின்னர் வெங்காயச் சாந்தையும் இஞ்சிப்பூண்டு விழுதையும் சேர்த்து வதக்க ஆரம்பிக்கவும்.
  3. வெங்காயச் சாந்தை நன்றாக வதக்கியதும், பொன்னிறமாக மாறத் துவங்கும், தக்காளி சாந்தைச் சேர்க்கவும்.
  4. மூடியிட்டு மூடி 2-3 நிமிடங்கள் வேகவைத்து, மசாலா பவுடரைச் சேர்க்கவும் (கரம் மசாலாவைத் தவிர)
  5. தக்காளி முழுமையாக வெந்து சாந்தாகச் சுருங்கி எண்ணெய் கசியும் வரை வேகவைக்கவும்.
  6. அதன்பின்னர் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  7. முந்திரி பருப்பு சாந்து சேர்த்து நன்றாகக் கலக்கி மேலும் 3-4 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  8. சர்க்கரை சேர்த்து கரம் மசாலாவைத் தூவி, நசுக்கிய கஸ்தூரி வெந்தயத்தைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
  9. பொரித்தப் பன்னீர் துண்டுகளில் போட்டு 3-4 நிமிடங்கள் மிதமானச் சூட்டில் வாசனையை உறிஞ்ச அனுமதிக்கவும்.
  10. அதன்பின்ன சிறு தீயில் வைத்து கிரீம் சேர்த்து ஒரு கலக்கு கலக்கவும். 2 நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை நிறுத்தவும்.
  11. ஒரு பரிமாறும் பாத்திரத்தில் எடுத்து கொஞ்சம் அதிகமாகக் கிரீம்சேர்த்து பரிமாறவும்.

எனது டிப்:

முந்திரிப்பருப்புச் சாந்துக்குப் பதிலாக பாதாம் சாந்து அல்லது முலாம்பழ விதைச் சாந்தைக்கூடப் பயன்படுத்தலாம். சர்க்கரை சுவையையும் தக்காளியின் அமிலத்தன்மையையும் சமன்படுத்துகிறது. பன்னீரைப் பொரிப்பது விருப்பம் சார்ந்தது. நன்றாகப் பொரிக்கலாம் ஆனால் அது எனக்குச் சுத்தமாக பிடிக்காது. அல்லது பன்னீரை சூடானத் தண்ணீரில் சாஸ் தயாரிக்கும்வரை ஊறவைக்கலாம். அது நேர்த்தியான முறை.

Reviews for Paneer Butter Masala in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.