வீடு / சமையல் குறிப்பு / பஞ்சாபி தம் ஆலு

Photo of Punjabi Dum Aloo by Pavithira Vijay at BetterButter
3744
824
4.5(0)
2

பஞ்சாபி தம் ஆலு

Jan-20-2016
Pavithira Vijay
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • பஞ்சாபி
  • சிம்மெரிங்
  • பாய்ளிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. 30 பேபி உருளைக்கிழங்கு
  2. 2 வெங்காயம் (அரைத்துச் சாந்தாக்கப்பட்டது)
  3. 2 தக்காளி (சாந்து)
  4. 10 முந்திரி பருப்பு (ஊறவைத்து சாந்தாக அரைக்கப்பட்டது)
  5. 2-3 தேக்கரண்டி எண்ணெய்
  6. 1/2 தேக்கரண்டி சீரகம்
  7. 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  8. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  9. 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  10. 1 1/2 தேக்கரண்டி கொத்துமல்லித் தூள்
  11. 1 தேக்கரண்டி சீரகத்தூள்
  12. தேவையான அளவு உப்பு
  13. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  14. 1 தேக்கரண்டி கஸ்தூரி வெந்தயம்

வழிமுறைகள்

  1. பேபி உருளைக்கிழங்கை சற்றே உப்பு சேர்த்து 1 விசிலுக்கு பிரஷர் குக்கரில் வேகவைத்து தோல் உரித்து தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. முந்திரி பருப்புகளை சூடானத் தண்ணீர் 15-20 நிமிடங்கள் ஊறவைத்து மென்மையானச் சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  3. சிறிது எண்ணெயை ஒரு வறுவல் பாத்திரத்தில் சூடுபடுத்தி உருளைக்கிழங்கைப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  4. இப்போது மீதமுள்ள எண்ணெயை ஒரு பாத்திரத்தில் மீண்டும் சூடுபடுத்தி, சீரகம் பெருங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயச் சாந்து சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கிக்கொள்க. அதன்பின்னர் இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து மிதமானச் சூட்டில் வதக்கிக்கொள்ளவும்.
  5. வெங்காயச் சாந்து நன்றாகப் பொன்னிறமானதும், தக்காளிச் சாந்தைச் சேர்த்து 5-6 நிமிடங்கள் வதக்கவும். அதன்பின்னர் மசாலா பவுடர்களைச் சேர்த்து (கரம் மசாலாவைத் தவிர) கலந்துகொள்க.
  6. குழம்பு 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு முந்திரிபருப்பு சாந்தைச் சேர்த்து மேலும் 4ல் இருந்து 5 நிமிடங்கள் வேகட்டும்.
  7. தண்ணீர் சேர்த்து குழம்பு கொதிக்கும்போது வறுத்த பேபி உருளைக்கிழங்குகளைப் போடவும். தீயை சிறு தீயாக-மிதமானத் தீயாகக் குறைத்து உருளைக்கிழங்குகள் சிம்மில் குழம்பில் 7ல் இருந்து 8 நிமிடங்கள் இருக்கட்டும்.
  8. அதன்பின்னர் கரம் மசாலாவையும் நசுக்கிய கஸ்தூரி வெந்தயத்தையும் சேர்த்து அடுப்பை 2-3 நிமிடங்களுக்குப் பிறகு நிறுத்தவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்