Photo of Pav baji by saranya sathish at BetterButter
460
3
0.0(0)
0

பாவ் பாஜி

Dec-08-2017
saranya sathish
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாவ் பாஜி செய்முறை பற்றி

பாவ் பாஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாவ் பாஜி மசாலா
  2. உருளைக்கிழங்கு - 3
  3. கேரட் - ஒரு கப்
  4. பீன்ஸ் - ஒரு கப்
  5. பச்சைபட்டாணி - 1/2 கப்
  6. காலிஃப்ளவர்- ஒரு கப்
  7. வெங்காயம் - ஒன்று
  8. தக்காளி - இரண்டு
  9. இஞ்சிபூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன்
  10. மிளகாய்தூள் - ஒரு ஸ்பூன்
  11. தனியாத்தூள் - ஒரு ஸ்பூன்
  12. மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
  13. சீரகத்தூள் - அரை ஸ்பூன்
  14. கரம்மசாலா தூள் - ஒரு ஸ்பூன்
  15. எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்
  16. சோம்பு - சிறிது
  17. கொத்தமல்லி - சிறிது
  18. வெண்ணெய் - தேவையான அளவு
  19. எண்ணெய் - தேவையான அளவு
  20. உப்பு - தேவையான அளவு
  21. தண்ணீர் - தேவையான அளவு
  22. பன் செய்ய
  23. மைதா - 4 கப்
  24. பட்டர் - 1/2 கப்
  25. பால் - 3/4 கப்
  26. சர்க்கரை - 1/2 டேபிள்ஸ்பூன்
  27. ஈஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
  28. வெதுவெதுப்பான நீர் - 2 கப்
  29. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

  1. மசாலா செய்ய:
  2. முதலில் உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை தோல் சீவி சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். காலிஃப்ளவர், பீன்ஸையும் சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் நீரை விட்டு, அதில் நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் ஆகியவற்றைப் போட்டு நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் வெந்நதும் நீரை வடித்து, மசித்துக் கொள்ளவும்.
  4. வாணலியில் வெண்ணெய் மற்றும் எண்ணெய்யை ஊற்றி அதில் சோம்பு போடவும். சோம்பு பொரிந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.
  5. பிறகு இஞ்சிபூண்டு விழுதைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் அத்துடன் நறுக்கிய காலிஃப்ளவரைப் போட்டு நன்கு வதக்கவும்.
  6. பின் மிளகாய்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம்மசாலா தூள் போட்டு உப்பு சிறிது சேர்த்து வதக்கவும். பின் மசித்த காய்களைப் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை விட்டு கலக்கவும்.
  7. சிறிது நேரம் கழித்து தண்ணீர் வற்றி கெட்டியாக ஆனதும், அதில் எலுமிச்சை சாறு விட்டு கிளறி, கொத்தமல்லியை தூவி இறக்கி விடவும்.
  8. பன் செய்ய:
  9. வெதுவெதுப்பான நீரில் சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.கலவை நன்கு பொங்கியிருக்கும்.
  10. ஒரு பவுலில் மாவு, பட்டர், ஈஸ்ட் கலந்த நீர்,பால், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து ஈரத்துணியால் மூடி வெப்பமான் இடத்தில் வைக்கவும்.
  11. 1 மணிநேரம் கழித்து மாவு 2மடங்காக உப்பியிருக்கும்.மறுபடியும் நன்கு பிசைந்து 1 மணிநேரம் வைக்கவும்.
  12. பின் மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும்.
  13. உருண்டையை டிரேயில் ஒன்றோடு ஒன்று ஒட்டுமாறு வைத்து ஈரத்துணியால் மூடி 45 நிமிஷம் வைக்கவும்.
  14. பின் மேலே பால்,சர்க்கரை கலவையை தடவவும்.
  15. பின் 180° டிகிரியில் 25-30 நிமிடங்கள் பேக் செய்யவும்.வெந்ததும் அவனில் இருந்து எடுத்து உருக்கிய பட்டரை ப்ரெஷ்ஷால் தடவி விடவும்.
  16. பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் பன்னை இரண்டாக நறுக்கி அதன் மேல் வெண்ணெய்யைத் தடவி சூடாக்கிக் கொள்ளவும்.
  17. பின் மசாலாவுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்