வீடு / சமையல் குறிப்பு / மசித்த மட்டன் குழம்பு

Photo of Minced Mutton Gravy by vimala lakshmi at BetterButter
1226
17
5.0(0)
0

மசித்த மட்டன் குழம்பு

Jan-22-2016
vimala lakshmi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மசித்த இறைச்சி - 1/2 கிலோ
  2. தக்காளி - 3, பெரிய அளவு
  3. அரைக்கப்பட்ட மசாலாக்கள் - 1 தேக்கரண்டி (இலவங்கப்பட்டை, ஜாதிக்காய், ஏலக்காய் மற்றும் கிராம்புகள்)
  4. இஞ்சி - பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  5. சிவப்பு மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
  6. மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  8. நெய்/எண்ணெய் - 2 தேக்கரண்டி
  9. சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
  10. கடுகு - 1 தேக்கரண்டி
  11. கறிவேப்பிலை - 1 கொத்து
  12. சுவைக்கேற்ற உப்பு
  13. தேங்காய் பால் - 1/2 கப் (விரும்பினால்)

வழிமுறைகள்

  1. தக்காளியை ஊறவைத்து வெளுக்கச் செய்யவும், அதன்பின் தோலை நீக்கி மென்மையான சாந்தாக அரைத்துக்கொள்ளவும். ஒரு பிரஷர் குக்கரில், நெய்யை சூடுபடுத்தி அதன்பின் கடுகை பொறிக்கவிட்டு கறிவேப்பிலை, நறுக்கப்பட்ட வெங்காயத்தைச் சேர்க்கவும். அவற்றை நன்றாக வதக்கி இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.
  2. பச்சை வாடை போனதும், சுத்தப்படுத்தப்பட்ட அரைத்த மட்டனைச் சேர்த்து நிறம் மாறும்வரை வதக்கவும். சிவப்பு மிளகாய், மல்லித்தூள், மசாலாத் தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அடுத்து, தக்காளிச்சாந்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. தேவைப்பட்டால் தேங்காய்ப்பாலை அல்லது தண்ணீரைச் சேர்த்து சுவைக்காக உப்பை சேர்க்கவும். மூடிவிட்டு பிரஷர் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவைக்கவும்.
  4. வெந்ததும், பிரஷர் அடங்கியதும், உணவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொத்துமல்லி தூவி சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்