வீடு / சமையல் குறிப்பு / முள்ளங்கி ரைத்தாவுடன் தென்னிந்திய பாணியிலான வெஜிடபிள் புலாவ்

Photo of South Indian Style vegetable Pulao with Radish Raita by Nandita Shyam at BetterButter
2569
150
4.0(0)
0

முள்ளங்கி ரைத்தாவுடன் தென்னிந்திய பாணியிலான வெஜிடபிள் புலாவ்

Jan-25-2016
Nandita Shyam
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • சௌத்இந்தியன்
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. புலாவுக்கு:
  2. பாஸ்மதி அரிசி - 250 கிராம்
  3. கேரட், பிரஞ்சு பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, காலிபிளவர் - 2 கப், நறுக்கப்பட்டு நீளவாக்கில் துண்டாக்கப்பட்ட காய்கறிக்கலவை.
  4. எண்ணெய் அல்லது நெய் - 3 தேக்கரண்டி
  5. சீரகம் - 1தேக்கரண்டி
  6. பிரிஞ்சி இலை - 1
  7. இலவங்கப்பட்டை - 1 துண்டு
  8. ஏலக்காய் - 3
  9. கிராம்பு - 3
  10. வெங்காயம் 1 நடுத்தர அளவிலானது, நீளவாக்கில் நறுக்கப்பட்டது
  11. இஞ்சிப்பூண்டு விழுது - 1 - 1/2 தேக்கரண்டி
  12. பச்சை மிளகாய் -1, பிளக்கப்பட்டது
  13. சுவைக்கேற்ற உப்பு
  14. கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  15. கொத்துமல்லி அலங்கரிப்பதற்காக
  16. அரைத்த சாந்துக்கா:
  17. வெங்காயம் - 1 சிறியது, பொடியாக நறுக்கப்பட்டது
  18. கசகசா - 1 தேக்கரண்டி, சிறிது வறுக்கப்பட்டது
  19. புதினா இலைகள் - 3 தேக்கரண்டி
  20. புதிய அல்லது பிரிஜ்ஜில் வைத்த தேங்காய் - 3 தேக்கரண்டி
  21. பச்சை மிளகாய் - 1
  22. ரைத்தாவுக்கு
  23. முள்ளங்கி - 2 நடுத்தர அளவு, தோல் உரிக்கப்பட்டு துருவப்பட்டது
  24. எண்ணெய் - 1 தேக்கரண்டி
  25. கடுகு - 1/2 தேக்கரண்டி
  26. பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  27. மிளகாய் துண்டுகள் - 1/2 தேக்கரண்டி
  28. கஸ்தூரி வெந்தயம் - 1 தேக்கரண்டி
  29. உப்பு - சுவைக்கேற்ற அளவு
  30. கெட்டித் தயிர் - 300 மிலி
  31. கொத்துமல்லி இலைகள் அலங்கரிப்பதற்காக

வழிமுறைகள்

  1. அரிசி சற்றே பொன்னிறமாகவும் வாசனை வரும்வரை எதுவும் சேர்க்காமல் வறுக்கவும். நன்றாகக் கழுவி, வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
  2. அரைத்து சாந்துக்குக் கீழ் பட்டியிலப்பட்ட அனைத்துப் பொருள்களையும் கொஞ்சம் தண்ணீரோடு அரைத்து எடுத்து வைக்கவும்.
  3. எண்ணெய் அல்லது நெய்யை கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தில் சூடுபடுத்தி சீரகம் சேர்க்கவும். பழுப்பானதும் பிரிஞ்சி இலை, கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் சேர்த்து அவை வெடிக்கும்வரை வறுக்கவும்.
  4. அவை வெடிக்க ஆரம்பித்ததும், வெங்காயம் சேர்த்து பளபளப்பாகும்வரை வறுக்கவும். பிளந்த மிளகாய், இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வறுக்கவும்.
  5. நறுக்கப்பட்டக் காய்கறிகள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து காய்கறிகள் பாதியளவு வெந்து மிருதுவாகும்வரை வறுக்கவும்.
  6. அரைத்தச் சாந்தைக் கலக்கி மேலும் இரண்டு நிமிடங்கள் அவற்றின் பச்சை வாடை போகும்வரை வறுக்கவும்.
  7. கழுவி வடிக்கட்டப்பட்ட அரிசியை மெதுவாகச் சேர்க்கவும். 3-1/2ல் இருந்து 4 கப் தண்ணீர், கரம் மசாலா சேர்த்து மிதமானச் சூட்டில் அரிசி முழுமையாக வேகும்வரை வேகவைக்கவும்.
  8. கொத்துமல்லியால் அலங்கரித்து ரைத்தாவுடன் சூடாகப் பரிமாறவும்.
  9. ரைத்தாவுக்கு
  10. எண்ணெயைக் கடாயில் சூடுபடுத்தி கடுகு சேர்க்கவும். அவை வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயம் சேர்த்து மேலும் சில நொடிகள் வறுக்கவும். மிளகாய்த் துண்டுகளைச் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வறுக்கவும்.
  11. துருவப்பட்ட முள்ளங்கி, உப்பு ஆகியவற்றைக் கலக்கி தண்ணீர் முழுமையாக ஆவியாகி கலவை உலரும் வரை வறுக்கவும். கஸ்தூரி வெந்தயத்தைச் சேர்த்து நன்றாகக் கலந்து, அடுப்பிலிருந்து எடுத்து முழுமையாக ஆறவிடவும்.
  12. ஆறிவிட்ட முள்ளங்கிக் கலவையில் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். கொத்துமல்லியால் அலங்கரித்து உங்களுக்குப் பிடித்த ரைத்தாவும் எதனுடனாவது பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்