வீடு / சமையல் குறிப்பு / தினை ரவா தோசை

Photo of Foxtail millet rava dosai by Subashini Krish at BetterButter
828
5
0.0(0)
0

தினை ரவா தோசை

Dec-15-2017
Subashini Krish
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தினை ரவா தோசை செய்முறை பற்றி

வெள்ளை ரவையில் செய்யும் ரவா தோசையை விடவும் ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இருக்கும். சிறு தானிய உணவுகளை பார்ட்டியில் பரிமாறி அனைவரையும் அசத்தலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. தினை அரிசி 2 கப்
  2. பச்சரிசி 1 கப்
  3. தயிர் 1 கப்
  4. மிளகு 1 ஸ்பூன்
  5. சீரகம் 1 ஸ்பூன்
  6. கறிவேப்பிலை 1 கைப்பிடி
  7. பெருங்காயம் 1/4 ஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தினையையும் அரிசியையும் நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. மிகவும் நைஸாக இருக்கக்கூடாது. சற்றே ரவை பதத்தில் இருக்க வேண்டும்.
  4. இதனுடன் கடைந்த தயிர் பெருங்காயம் , தண்ணீர் ,உப்பு சேர்த்து ரவா தோசை பதத்திற்கு நீர்க்க கரைக்கவும்.
  5. ஒரு மணி நேரம் கழித்து மாவை கல்லில் தெளித்து( ரவா தோசை போல்) ஊற்றவும்.
  6. திருப்பி போட கூடாது. நன்கு முறுகளாக வெந்தவுடன் மடக்கி பரிமாறவும்.
  7. பார்ட்டியில் நேரடியாக சுட்டு பரிமாறினால் அனைவராலும் மிகவும் விரும்பப்படும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்