வீடு / சமையல் குறிப்பு / கோஃப்டா பிரியாணி/அரைக்கப்பட்டக் காரசாரமான மட்டன் கறி உருண்டை புலாவ்

Photo of Kofta Biryani/Spicy Minced Lamb Meat Balls Pilaf by Lubna Karim at BetterButter
2922
103
5.0(0)
0

கோஃப்டா பிரியாணி/அரைக்கப்பட்டக் காரசாரமான மட்டன் கறி உருண்டை புலாவ்

Jan-26-2016
Lubna Karim
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஹைதராபாத்
  • சிம்மெரிங்
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோஃப்டாவுக்கா:
  2. 1/2 கப் கடலைப் பருப்பு, கழுவி 1 மணி நேரத்திற்கு ஊறவைக்கப்பட்டது
  3. 2 கப் சமைக்கப்படாத எலும்பில்லாத மட்டன் துண்டுகள்
  4. + 3 சமைக்கப்படாத மட்டன் துண்டுகள்
  5. 1 வெங்காயம், தோலுரிக்கப்பட்டு நறுக்கப்பட்டது
  6. 1 பச்சை மிளகாய், விதை நீக்கப்பட்டு நறுக்கப்பட்டது
  7. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  8. 2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  9. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  10. 3 தேக்கரண்டி கொப்பரைத் தேங்காயத் தூள்
  11. 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  12. 3-4 கொத்து புதிய கொத்துமல்லி, நறுக்கப்பட்டது
  13. 5-6 புதிய புதினா இலைகள், நறுக்கப்பட்டது
  14. உப்பு
  15. எண்ணெய்
  16. குழம்புக்கு:
  17. 1 கப் கெட்டித் தயிர், கடையப்பட்டது
  18. 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  19. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  20. 1 பச்சை மிளகாய், நீளவாக்கில் பிளக்கப்பட்டு, விதை நீக்கப்பட்டது
  21. 1 வெங்காயம், தோலுரித்து நறுக்கியது
  22. 2 ஏலக்காய்
  23. 2 கிராம்பு
  24. 1 துண்டு இலவங்கப்பட்டை
  25. 1 தக்காளி, விதைநீக்கி நறுக்கியது
  26. 2-3 கொத்து புதிய கொத்துமல்லி, நறுக்கியது
  27. உப்பு
  28. சாதத்திற்கு:
  29. ½ கிலோ, பாஸ்மதி அரிசி, கழுவி ½ மணி நேரம் ஊறவைத்தது
  30. 1 தேக்கரண்டி, இஞ்சிப்பூண்டு விழுது
  31. 3 ஏலக்காய், 3 கிராம்பு
  32. மற்றும் 1 1” இன்ச் துண்டு இலவங்கப்பட்டை
  33. 1 பாடி ஏலக்காய்/கருப்பு ஏலக்காய்
  34. 1 நட்சத்திர சோம்பு, 1 பிரிஞ்சி இலை
  35. உப்பு
  36. ஊறவைக்:
  37. ½ தேக்கரண்டி, குங்குமப்பூ
  38. 3 தேக்கரண்டி, வெதுவெதுப்பானப் பால்
  39. அலங்கரிக்க:
  40. 3 தேக்கரண்டி அரைத்த கொத்துமல்லி
  41. 2 தேக்கரண்டி அரைத்த புதினா இலைகள்
  42. மற்ற சேர்வைப்பொருள்கள்:
  43. ¾ கப் நெய்
  44. 2 நறுக்கி வறுத்த வெங்காயம்
  45. 4 தேக்கரண்டி, புதிய எலுமிச்சை சாறு
  46. 1 தேக்கரண்டி, கரம் மசாலா

வழிமுறைகள்

  1. கோஃப்டா தயாரிப்பது:
  2. ஒரு பாத்திரத்தில் தயிர், சிவப்பு மிளகாய், மஞ்சள் தூள் சேர்க்கவும். கடலைப் பருப்பு, சமைக்காத மட்டன் துண்டுகள், சிவப்பு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தேங்காய்த் தூள், பச்சை மிளகாய், இஞ்சிப்பூண்டு விழுது, கரம் மசாலா, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  3. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் பருப்பு மென்மையாகவும் மட்டன் மிருதுவாகவும் மாறும்வரை வேகவைக்கவும். ஆறவிடவும். இதற்கிடையில் ஒரு கனமாக அடிப்பாகமுள்ள சமையல் பாத்திரம் அல்லது கடாயையில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயத்தோடு ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டையைச் சேர்க்கவும்.
  4. வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து மென்மையாகும்வரை வறுக்கவும்.
  5. இப்போது அடித்து வைத்துள்ள தயிரைச் சேர்த்து கலவை கொதிவரும்வரை கலக்கிக்கொண்டே இருக்கவும். அடுப்பை நிறுத்திவிட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும். பிரஷர் குக்கர் கலவையோடு உப்பு, கொத்துமல்லி, புதினா இலை, சமைக்காத மட்டனைச் சேர்த்து மென்மையான சாந்தாக அரைத்து்ககொள்ளவும்.
  6. கைகளில் எண்ணெய் தடவி சிறுசிறு உருண்டைகளாக அரைத்தக் கலவையில் இருந்து தயாரித்துக்கொள்ளவும். ஒரு கனமான அடிப்பாக சமையல் பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து உருண்டைகள் பொன்னிறமாக மாறும்வரை பொரித்து டிஷ்யூ பேப்பரில் எடுத்து வைக்கவும்.
  7. இப்போது கறி உருண்டைகளை தயாரித்து வைத்துள்ள தயிர் குழம்பில் முக்கி சிறிது நேரம் வேகவைக்கவும்.
  8. இதற்கிடையில்:
  9. ஒரு கனமான அடிப்பாக சமையல் பாத்திரத்தில் நெய்யுடன் ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை சேர்க்கவும். மசாலாக்கள் வாசனையை வெளிவிடும்போது, பொடியக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும்.
  10. மொறுமொறுப்பாகவும் பொன்னிறமாகவும் மாறும்வரை வறுக்கவும். (கவனம், சிறு தீயில் வறுக்கவும், தொடர்ந்து கலக்கிக்கொண்டே இருக்கவும்). இப்போது சல்லிக்கரண்டியால் வறுத்த வெங்காயத்தை நெய்யிலிருந்து எடுக்கவும். நெய்யை ஒரு கப்பில் எடுத்து வைத்துக்கொள்க.
  11. சாதம் வடித்தல்:
  12. ஒரு கனமாக அடிப்பாக சமையல் பாத்திரத்தில் 10-12 கப் தண்ணீர், (அதிகமாக இருந்தாலும் பிரச்சினை இல்லை, தண்ணீரை நாம் வடிக்கட்டிவிடுவோம்), உப்பு, இஞ்சிப்பூண்டு விழுது, 3 ஏலக்காய், 3 கிராம்பு, 2 இலவங்கப்பட்டைக் குச்சி, கருப்பு ஏலக்காய், நட்சத்திர சோம்பு, பிரிஞ்சி இலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
  13. தண்ணீரைக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், வேகவைத்த பாஸ்மதி அரிசியைச் சேர்த்து அது வேகும்வரையில் வேகவைக்கவும்.
  14. ஒரு சமையல் பாத்திரத்தில் சல்லடையைப் பயன்படுத்தித் தண்ணீரை வடிக்கட்டி சேகரித்து வைத்துக்கொள்ளவும். நன்றாக வடிக்கட்டி எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  15. அடுக்குகள் தயாரிப்பது:
  16. இப்போத ஒரு கனமான அடிப்பாக சமையல் பாத்திரத்தில் கொஞ்சம் நெய்சேர்த்து (வெங்காயத்தை வறுத்தது) அந்த அடக்கின் மீது பாதி பாஸ்மதி சாதத்தைச்சேர்க்கவும்.
  17. இவற்றின் மீது குர்மா (குழம்பு மட்டும் கோஃப்ட்டா கிடையாது), நெய், கரம் மசாலா, குங்குமப்பூ (வெதுவெதுப்பான் பாலில் ஊறவைத்தது), வறுத்த வெங்காயம், 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, புதிதாக அரைத்தக் கொத்துமல்லி புதினா இலைகள் ஆகியவற்றைச்சேர்க்கவும்.
  18. அதனை இன்னொரு அடுக்கு பாஸ்மதி அரிசியால் மூடவும். உங்கள் குர்மா அதிகம் இருந்தால் அரிசியின் மீது ஒரு அடுக்கு கொடுக்கவும். இப்படியாகச் செய்யவும்.
  19. இப்போது மீதமுள்ள நெய், குங்குமப்பூ, வறுத்த வெங்காயம், கரம் மசாலா, 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, புதிய கொத்துமல்லி புதினா இலைகள் சேர்க்கவும்.
  20. கோஃப்டாவை மேல் அடுக்கில் வட்டவடிவில் மெதுவாக ஒவ்வொரு கோஃப்டாவுக்கும் இடையில் இடைவெளி விட்டு அடுக்கவும்.
  21. ஒரு மூடியால் மூடி சிறு தீயில் சமைக்கவும். வடிக்கட்டியத் தண்ணீரை மூடியின் மீது வைத்து அலுமினியத் தாளினால் சீல் செய்யவும்.
  22. இறுதி வழிமுறை:
  23. கிட்டத்தட்ட 20-25 நிமிடங்கள் சிறு தீயில் சமைக்கவும். அடுப்பை நிறுத்திவிட்டு அடுப்பிலேயே பாத்திரத்தை மேலும் ஒரு அரை மணி நேரம் விடவும். இதற்குப் பதிலாக முன்னரே சூடேற்றப்பட்ட ஓவனில் 200°C (400°F) க்கு 20 நிமிடங்கள் பேக் செய்யலாம்.
  24. பரிமாறுதல்:
  25. பரிமாறுவதற்கு நீங்கள் தயாராக இருக்கும்போது, மிக மெதுவாக கோஃப்டாவை எடுக்கவும். பிரியாணியில் மெதுவாகக் கலக்கவும். பிரியாணியை ஒரு பரிமாறும் தட்டில் எடுத்து கோஃப்டா, அரைத்த புதிய கொத்துமல்லி, புதினா இலைகளை மேலே வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்