வீடு / சமையல் குறிப்பு / பெட்டர் பட்டர் பூண்டு பிரைட் ரைஸ்

Photo of Better Butter Garlic Fried Rice by Vibha Bhutada at BetterButter
2135
122
4.2(0)
0

பெட்டர் பட்டர் பூண்டு பிரைட் ரைஸ்

Jan-28-2016
Vibha Bhutada
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • ஜப்பானிய
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி அரிசி - 1 1/2 கப்
  2. சமையல் எண்ணெய் - 1 தேக்கரண்டி
  3. பூண்டு, நறுக்கியது - 3 தேக்கரண்டி
  4. வெங்காயம் பொடியாக நறுக்கியது - 2
  5. பச்சை மிளகாய், நறுக்கியது 5-6
  6. பிரெஞ்ச் பீன்ஸ், நறுக்கியது - 3 தேக்கரண்டி
  7. கேரட், துருவல் - 1/4 கப்
  8. கருமிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
  9. வெண்ணெய் - 5 தேக்கரண்டி
  10. சுவைக்கேற்ற உப்பு

வழிமுறைகள்

  1. அரிசியைக் கழுவிச் சுத்தப்படுத்தி 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
  2. ஒரு வானலியில் ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து 1 தேக்கரண்டி உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், ஊறவைத்த அரிசியைப் போடவும். அரிசி முறையாக வேகும்வரை வேகவைக்கவும்.
  3. வடிக்கட்டி பயன்படுத்தி கூடுதல் தண்ணீரை வடிக்கட்டவும்.
  4. பிரைடு ரைசுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் தயாராக வைத்துக்கொள்ளவும். எண்ணெயுடன் வானலியைச் சூடுபடுத்தி பூண்டை வதக்கிக்கொள்ளவும். 30 விநாடிகள் கலக்கவும்.
  5. வெங்காயம் சேர்த்து வெங்காயம் பளபளப்பான நிறத்தைப் பெறும்வரை சமைக்கவும். பிரெஞ்ச் பீன்ஸ், பச்சை மிளகாய் சேர்க்கவும். மேலும் 2-3 நிமிடங்கள் உயர் தீயில் சமைக்கவும்.
  6. அடுத்து, கேரட் சேரத்து மேலும் சில நொடிகள் வேகவைக்கவும்.
  7. அதன்பின்னர் சுவைக்கேற்றபடி உப்பு சேர்க்கவும். நன்றாகக் கலக்கி உயர் தீயில் 2-3 நிமிடங்கள் வேகவைக்கவும்.
  8. அடுப்பை நிறுத்தவும். சமைத்த சாதத்தை ஒரு பெரிய வானலியில் மாற்றிக்கொள்க.
  9. வேகவைத்த அனைத்துக் காய்கறிகளையும் அரிசி மீது போட்டு மெதுவாக உங்கள் கைகளால் கிளறவும். (இந்த நிலையில் செயல்படும்போதும் கவனம் தேவை. விரல்களைச் சுட்டுக்கொள்ளாதீர்கள். மேலும் உங்கள் கைகள் சுத்தமாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்)
  10. இறுதியாக வெண்ணெய் மிளகுத் தூள் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  11. மேலும் 2 நிமிடங்கள் பரிமாறுவதற்கு முன் வேகவைக்கவும்.
  12. புதிய கொத்துமல்லியால் அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்