வீடு / சமையல் குறிப்பு / புதினா பன்னீர் புலாவ் (புதினாவும் வீட்டில் தயாரிக்கப்பட்ட கொண்டைக்கடலைப் புலாவ்)

Photo of Pudina Paneer Pulao(Mint and home made chenna Pulao) by sapna dhyani devrani at BetterButter
4441
323
4.6(0)
0

புதினா பன்னீர் புலாவ் (புதினாவும் வீட்டில் தயாரிக்கப்பட்ட கொண்டைக்கடலைப் புலாவ்)

Jan-29-2016
sapna dhyani devrani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • சிம்மெரிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 மற்றும் 3/4 கப் பாஸ்மதி அரிசி (தண்ணீரில் 30 நிமிடங்கள் ஊறவைத்தது)
  2. 1 கப் புதினா இலை - பொடியாக நறுக்கியது
  3. 1 கப் கொண்டைக்கடலை அல்லது பன்னீர்
  4. 3/4 கப் கடையப்பட்டத் தயிர்
  5. 3 வெங்காயம் நறுக்கியது
  6. 1 பிரிஞ்சி இலை, 3 பச்சை ஏலக்காய், 3 கிராம்பு, 2 கருப்பு ஏலக்காய், 6 கருமிளகு
  7. 1 இன்ச் இஞ்சித் துண்டு, 3 பூண்டு பற்கள், 1 பச்சை மிளகாய் நசுக்கியது
  8. நெய் அல்லது எண்ணெய் 4 தேக்கரண்டி
  9. சுவைக்கேற்ற உப்பு
  10. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் நிறத்திற்காக (விருப்பம் சார்ந்தது)

வழிமுறைகள்

  1. ஒரு கனமான அடிப்பாகமுள்ள கடாயில் நெய்யைச் சூடுபடுத்தி பிரிஞ்சி இலை, கிராம்பு, பச்சை ஏலக்காய், கருப்பு ஏலக்காய், கருமிளகு ஆகியவற்றைச் சேர்த்து உடைத்துக்கொள்ளவும்.
  2. நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். இவற்றோடு நசுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயைச் சேர்க்கவு். 10-15 விநாடிகள் வதக்கவும்.
  3. பன்னீரையும் தயிரையும் சேர்க்கவும். 2-3 நிமிடங்கள் சிறு தீயில் வேகவைக்கவும்.
  4. உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். வடிக்கட்டிய அரிசி மற்றும் நறுக்கிய புதினாவில் பாதியை மூழ்கச் செய்யவும்.
  5. மூடியிட்டு மூடி 8-10 நிமிடங்கள் அல்லது அரிசி வேகும்வரை வேகவைக்கவும்.
  6. மீதமுள்ள புதினாவை புலாவின் மீது தூவி சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்