கோபி மஞ்சூரியன் | Gobhi Manchurian in Tamil

எழுதியவர் Anushka Basantani  |  6th Jul 2015  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • கோபி மஞ்சூரியன், How to make கோபி மஞ்சூரியன்
கோபி மஞ்சூரியன்Anushka Basantani
  • ஆயத்த நேரம்

    0

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    45

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

3922

0

கோபி மஞ்சூரியன் recipe

கோபி மஞ்சூரியன் தேவையான பொருட்கள் ( Ingredients to make Gobhi Manchurian in Tamil )

  • 1/2 கப் சோளமாவு
  • 5 தேக்கரண்டி மைதா
  • 1/2 கப் தண்ணீர்
  • 1 தேக்கரண்டி அரிசி மாவு
  • 1 நடுத்தர அளவுள்ள கோபி சிறுசிறு பூக்களாக நறுக்கப்பட்டது
  • சுவைக்கேற்ற உப்பு
  • 1 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கப்பட்டது
  • 2 பச்சை மிளகாய்க்ள் நறுக்கப்பட்டது
  • 1 நடுத்தர அளவுள்ள குடமிளகாய் நறுக்கப்பட்டது
  • 1 தேக்கரண்டி சோயா சாஸ்
  • 1/2 தேக்கரண்டி மிளகாய் சாஸ்
  • 1 தேக்கரண்டி தக்காளி சாஸ்
  • 1/2 தேக்கரண்டி காஷ்மீரி சிவப்பு மிளகாய்த் தூள் அல்லது நாட்டு மிளகாய்
  • ஸ்பிரிங் ஆனியன் 1 இன்ச் துண்டுகளாக நறுக்கப்பட்டது

கோபி மஞ்சூரியன் செய்வது எப்படி | How to make Gobhi Manchurian in Tamil

  1. பூக்களை நன்றாக அலசிக்கொள்க. கொதிக்கும் நீரில் உப்புடன் பூக்களையும் சேர்த்து மிதமானத் தீயில் 10-15 நிமிடங்கள் வைக்கவும். கூடுதல் தண்ணீரை வடிக்கட்டி எடுத்து வைக்கவும்.
  2. அரிசி மாவு, மைதா, சோள மாவு, உப்பு, இஞ்சிப்பூண்டு விழுது ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் கலந்துகொள்க. தண்ணீரைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். அப்போதுதான் கலவை பாதி அடர்த்தி பதத்தை அடையும். மாவில் எல்லா பூக்களையும் சேர்த்து நன்றாகக் கலக்கிக்கொள்க.
  3. வானலியில் எண்ணெணை மிதமானச் சூட்டில் சூடுபடுத்திக்கொள்க. கவனமாக 6-9 பூக்களைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  4. 2 தேக்கரண்டி எண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி, இஞ்சிப்பூண்டு விழுது, வெங்காயம், குடமிளகாய் சேர்க்கவும். 3-4 நிமிடங்கள் வதக்கவும்.
  5. சோயா சாஸ், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், உப்பு, நாட்டு மிளகாய் சேர்க்கவும். ஒன்றல்லது இரண்டு நிமிடத்திற்கு வேகவைக்கவும்.
  6. பூக்களை சாசில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  7. ஸ்பிரிங் ஆனியன், பச்சை மிளகாயால் அலங்கரிக்கவும். சூடாகப் பரிமாறவும்.

Reviews for Gobhi Manchurian in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.