வீடு / சமையல் குறிப்பு / இறால் மசால்

Photo of Prawn masal by Surya Rajan at BetterButter
350
5
0.0(0)
0

இறால் மசால்

Dec-31-2017
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இறால் மசால் செய்முறை பற்றி

இறால் மசால்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இறால் : 1/2 கிலோ
  2. உப்பு : தேவையான அளவு
  3. கருவேப்பிலை : சிறிதளவு
  4. நல்லெண்ணெய் : 4 மேஜைக்கரண்டி
  5. கடுகு : சிறிதளவு
  6. சின்ன வெங்காயம் : 5
  7. பூண்டு : 5 பல்
  8. தக்காளி : 1
  9. மிளகாய் : 2
  10. மஞ்சள் தூள் : 1 மேஜைக்கரண்டி
  11. குழம்பு மசாலா : 2  மேஜைக்கரண்டி (அல்லது மிளகாய் தூள் : 2 மேஜைக்கரண்டி + மல்லி தூள் :1/2 மேஜைக்கரண்டி )
  12. அரைக்க :
  13. தேங்காய் துருவல் : 4 மேஜைக்கரண்டி
  14. சோம்பு : 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. இறாலை சுத்தம் செய்து வைக்கவும் . பூண்டினை இடித்து வைத்து கொள்ளவும் . அரைக்க கொடுத்ததை அரைத்து வைத்து கொள்ளவும் .
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , கருவேப்பிலை தாளித்து பின் சின்ன வெங்காயம் ,தக்காளி,மிளகாய் நசுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. மிளகாய் தூள், மல்லி தூள் (அல்லது  குழம்பு மசாலா ) மஞ்சள் தூள் , உப்பு  சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் ( தேவையென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்)
  4. பின் இறால் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  5. பின் இறால் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்
  6. பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கிளறி கொண்டே ( 5 நிமிடம் ) இருக்கவும் .தேவையான பதத்தில் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்