Photo of Dilpasand Mutton by Ayesha Ziana at BetterButter
667
3
0.0(1)
0

Dilpasand Mutton

Dec-31-2017
Ayesha Ziana
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Dilpasand Mutton செய்முறை பற்றி

மட்டன், அரைத்த எள் மசாலா, தயிர் உள்ளிட்டவை சேர்த்து செய்த கறி. ரொட்டி, நான், இடியாப்பம், நெய் சோறு போன்றவையுடன் நன்றாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • பிரெஷர் குக்
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மட்டன் 1/2 கிலோ
  2. வெங்காயம் 1 1/2
  3. இஞ்சி பூண்டு விழுது 1 1/4 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  5. மல்லித்தூள் 1 1/4 ஸ்பூன்
  6. கரம் மசாலா 1 ஸ்பூன் நிறைய
  7. உப்பு தேவைக்கு
  8. தண்ணீர் தேவைக்கு
  9. எண்ணெய் தேவைக்கு
  10. தக்காளி 1 1/4
  11. தயிர் 150 கிராம்
  12. துருவிய இஞ்சி 2 ஸ்பூன் அல்லது தேவைக்கு
  13. பாதாம் அலங்கரிக்க
  14. வறுத்து அரைக்க: டேசிக்கேட்டட் தேங்காய் 3 ஸ்பூன்
  15. கறுப்பு எள் 2 ஸ்பூன்
  16. கசகசா 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மட்டனை குக்கரில் மஞ்சள் தூள், வெங்காயம், மல்லி தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தண்ணீர் சேர்த்து 7 விசில் வேக வைக்கவும்.
  2. தக்காளியை மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்.
  3. வறுத்து அரைக்க: எள்ளையும் கசகசாவையும் வறுத்து அதனுடன் டேசிக்கேட்டட் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
  4. குக்கரை திறந்து, அரைத்த மசாலா, தக்காளி விழுது, தயிர் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து, இடையிடையே எண்ணெயும் சேர்த்து, ஹை தீயில் கிளறி கொண்டே இருக்கவும்.
  5. செமி கிரேவி பதம் வந்ததும் கரம் மசாலா சேர்த்து கிளறி, இறுதியாக துருவிய இஞ்சியும் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
  6. பரிமாறும் போது நறுக்கிய பாதாம் துண்டுகளை வைத்து அலங்கரிக்கவும். சூப்பரான தில்பசந்த் மட்டன் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Jan-01-2018
Pushpa Taroor   Jan-01-2018

Good

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்