வீடு / சமையல் குறிப்பு / காய்கறி லாசாங்கே

Photo of Veg Lasagne by Nishi Rahul at BetterButter
14719
206
4.6(0)
0

காய்கறி லாசாங்கே

Feb-01-2016
Nishi Rahul
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • இத்தாலிய
  • ஸ்டிர் ஃபிரை
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • பேசிக் ரெசிப்பி
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. லாசாங்கே ஷீட்டுகள்:
  2. 400 கிராம் மைதா
  3. 3 முட்டை
  4. 3 தேக்கரண் ஆலிவ் எண்ணெய்
  5. சுவைக்கேற்ற உப்பு
  6. சிவப்பு சாஸ்:
  7. 4 நடுத்தர அளவு தக்காளி
  8. 1 வெங்காயம்
  9. 7-8 பூண்டு பற்கள்
  10. 1/4 கப் நறுக்கிய துளசி இலைகள்
  11. 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
  12. சுவைக்கேற்ற உப்பு
  13. வெள்ளை சாஸ்:
  14. 1 கப் மைதா
  15. 2 தேக்கரண்டி வெண்ணெய்
  16. 2 கப் பால் (சாதாரண வெப்பநிலையில்)
  17. 1 தேக்கரண்டி கற்பூரவள்ளித் தூள்
  18. சுவைக்கேற்ற உப்பு
  19. காய்கறிகள்:
  20. 1/2 கப் புரோகோலி
  21. 1/2 கப் கேரட்
  22. 1 வெங்காயம்
  23. 1/4 கப் குடமிளகாய்
  24. 1/4 கப் பேபி கார்ன்
  25. 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
  26. 1 தேக்கரண்டி உப்பு
  27. 1/2 தேக்கரண்டி மிளகு
  28. 2 கப் மோர்செல்லா வெண்ணெய் துருவல்
  29. அனைத்துக் காய்கறிகளையும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

வழிமுறைகள்

  1. லாசாங்கே ஷீட்: அனைத்துப் பொருள்களையும் ஒரு கிண்ணத்தில் கலந்து மாவாகத் தயாரித்துக்கொள்க (மிருதுவாகவோ அல்லது கடினமாகவோ இருக்கக்கூடாது). மாவில் தூவி உருட்டிக்கொள்க. செவ்வகமாக அல்லது சதுரமாக வெட்டிக்கொள்க. மிக மெலிதாக உருட்ட வேண்டாம், கொதிக்கும் போது உடைந்துவிடும்.
  2. ஒரு கடாயில் தண்ணீரைக் கொதிக்கவிடவும். இந்தப் பட்டைகளை 7ல் இருந்து 8 நிமிடங்கள் கொதிக்கவிடவும். தண்ணீரை வடிக்கட்டி இந்தப் பட்டைகளை குளிர்ந்த நீரில் ஊற்றி வடிக்கட்டவும். இந்த செய்முறையின் போது அவை சுருட்டிக்கொள்ளக்கூடாது. ஷீட்டுகள் தயார். எடுத்து வைத்துக்கொள்க.
  3. சிவப்பு சாஸ்: அனைத்துப் பொருள்களில் இருந்து சிவப்பு சாசுக்காக சாந்தைத் தயாரித்துக்கொள்க. ஆலிவ் எண்ணெயைக் கடாயில் சூடுபடுத்தி நறுக்கிய துளசி இலைகளைப் போட்டு வதக்கி சாந்தை சேர்த்துக்கொள்க. கொதிக்கவிடுக. சாஸ் தயார்.
  4. வெள்ளை சாஸ்: வெண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி மாவைச் சேர்த்து சற்றே வறுபடும்வரை வதக்கிப் பிறகு மெதுவாக பாலைக் கலக்கிக்கொண்டேச் சேர்த்துக் கட்டிகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். அடர்த்தியானதும் உப்பு, கற்பூரவள்ளி சேர்க்கவும்.
  5. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி அனைத்துக் காய்கறிகளையும் சேர்க்கவும். உப்பு, மிளகு,சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். காய்கறிகளை அதிகம் வேகவைக்கவேண்டாம், அவை கடிக்கும் பதத்தில் இருக்கவேண்டும்.
  6. அடுக்குகள் செய்வது: முதல் அடுக்கு பாஸ்தா ஷீட், சிவப்பு சாஸ் அதன் பின் காய்கறிகள், வெள்ளை சாஸ், மேல்செல்லா வெண்ணெய் அதன் மேல். மீண்டும் செய்க. லசாங்கே ஷீட், சிவப்பு சாஸ், காய்கறிகள், வெள்ளை சாஸ், இறுதியாக வெண்ணெய். சிறப்பான சுவைக்கு 4ல் இருந்து 5 அடுக்குகள் செய்யலாம்.
  7. மேல் அடுக்கு ஷீட்டாக இருக்கவேண்டும். அதன் மீது அதிகமாக வெண்ணெய் வைக்கவும்.
  8. பீரி ஹீட் செய்யப்பட்ட ஓவனில் 15ல் இருந்து 20 நிமிடங்கள் 200 டிகிரி செண்டிகிரேட்டில் வெண்ணெய் உருகும்வரை, மேல் பாகம் பொன்னிறமாகும்வரை பேக் செய்யவும். புதிய துளசி இலைகளால் பரிமாறுவதற்கு முன் அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்