மட்டன் கிரேவி | Mutton Gravy in Tamil

எழுதியவர் Asiya Omar  |  2nd Jan 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • மட்டன் கிரேவி, How to make மட்டன் கிரேவி
மட்டன் கிரேவிAsiya Omar
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  15

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

12

0

0 votes
மட்டன் கிரேவி recipe

மட்டன் கிரேவி தேவையான பொருட்கள் ( Ingredients to make Mutton Gravy in Tamil )

 • ஆட்டுக்கறி - அரைக்கிலோ
 • எண்ணெய் -2-3 மேஜைக்கரண்டி
 • இஞ்சி பூண்டு விழுது -2+1 தேக்கரண்டி
 • கரம் மசாலா - அரை தேக்கரண்டி
 • நறுக்கிய பெரிய வெங்காயம்-2
 • பெரிய தக்காளி -1
 • பச்சை மிளகாய் -2
 • நறுக்கிய மல்லி இலை - சிறிது
 • தயிர் - 2 மேஜைக்கரண்டி
 • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
 • மிளகாய்த்தூள் - ஒன்னரை தேக்கரண்டி
 • சீரகத்தூள் - அரை அல்லது 1 தேக்கரண்டி
 • உப்பு - தேவைக்கு.

மட்டன் கிரேவி செய்வது எப்படி | How to make Mutton Gravy in Tamil

 1. கறியை நன்கு அலசி தண்ணீர் வடித்து மஞ்சள் தூள்,1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது,தயிர்,உப்பு சேர்த்து ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து சிவற வதக்கவும்.2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு கரம் மசாலா சேர்க்கவும்.
 2. அடுத்து தக்காளி,பச்சை மிளகாய் ,மல்லி இலை, உப்பும் சேர்த்து வதக்கவும்.
 3. மிளகாய்த்தூள்,சீரகத்தூள் சேர்த்து பிரட்டவும்.
 4. ஊற வைத்த கறி சேர்க்கவும்.தேவைக்கு அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.உப்பு காரம் சரி பார்த்து மூடவும்.
 5. 5 வசில் அல்லது 10 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.
 6. திறந்து கொதிக்க விடவும்.
 7. வெந்த கறியில் சிறிது தண்ணீர் இருந்தால் வற்ற விடலாம். எங்க ஊர் பக்கம் கிரேவி கெட்டியாக ஒரே ஒரு தேக்கரண்டி அரிசி மாவு கரைத்து ஒரு சிலர் சேர்ப்பார்கள் . அடுப்பைக் குறைத்து வைக்கவும்.எண்ணெய் மேலே வந்து கெட்டியாகும்.அடுப்பை அணைக்கவும்.
 8. சூப்பர் சுவையுள்ள மட்டன் கிரேவி தயார்.
 9. சூடான சாதம்,புலாவ்,பிரியாணி ,சப்பாத்திக்கு அருமையாகயிருக்கும்.

எனது டிப்:

விரும்பினால் கெட்டியாக 1-2 மேஜைக்கரண்டி தேங்காய் அரைத்தும் சேர்க்கலாம்.

Reviews for Mutton Gravy in tamil (0)