வீடு / சமையல் குறிப்பு / தமிழ் பாணி கோழிக் குழம்பு

Photo of Tamil style Chicken Kuzhambu by Aishwarya Lahiri Khanna at BetterButter
1942
35
0.0(0)
0

தமிழ் பாணி கோழிக் குழம்பு

Jul-27-2015
Aishwarya Lahiri Khanna
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
90 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கிலோ கோழி
  2. 3 பெரிய வெங்காயம் நன்றாக நறுக்கப்பட்டது
  3. 2 தக்காளிகள் நறுக்கப்பட்டது
  4. 2 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  5. 5 பச்சை மிளகாய் பிளக்கப்பட்டது
  6. 10-12 கரிவேப்பிலை இலைகள்
  7. 10-12 மல்லி இலைத் தண்டுகள் நறுக்கப்பட்டது
  8. 3-4 புதினா இலைகளின் தண்டுகள்
  9. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்/ஹால்டி
  10. 2-3 தேக்கரண்டி மிளகாய்த்தூள்
  11. 3 தேக்கரண்டி மல்லித்தூள்/தனியா
  12. 4-5 எலுமிச்சை இலைகள் பாதியாக நறுக்கப்பட்டது அல்லது
  13. 2 நசுக்கப்பட்ட 1 இன்ச் எலுமிச்சைத் தண்டுகள்
  14. உப்பும் சர்க்கரையும் சுவைக்காக
  15. 2 தேக்கரண்டி கடுகு விதைகள்/ராய்
  16. 1 தேக்கரண்டி பெருஞ்சீரக விதைகள்/சான்ஃப்
  17. 1 கரிப்பட்டைக் குச்சி
  18. 4-5 கிராம்புகள்
  19. சிறிய 1 கப் திருகப்பட்ட தேங்காய்/கொப்பரை சிறிதளவு நீரில் ஊறவைக்கப்பட்டது
  20. 2 தேக்கரண்டி டாலியா அல்லது ஓட்ஸ்
  21. 1 தேக்கரண்டி கசகசா / குஸ்குஸ்
  22. எண்ணெய்

வழிமுறைகள்

  1. தேங்காய், ஓட்ஸ்/டாலியா கசகசாவோடு கொஞ்சம் தண்ணீர்விட்டு சாந்தாக அறைத்துக்கொள்ளவும்.
  2. பிரஷர் குக்கரில் எண்ணெயை சூடுபடுத்தி கடுகு, பெருங்சீரகம், இலவங்கப்பட்டை கிராம்பு எல்லாவற்றை ஒன்றாக கரிவேப்பிலையோடு பச்சை மிளகாயோடு சேர்க்கவும். இப்போது வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து பச்சைவாடை போகும்வரை வறுக்கவும்.
  3. தக்காளியைப்போட்டு மிருதுவாகும்வரை வறுக்கவும். இப்போது மஞ்சள்தூள், மிளகாய்ப்பொடி மல்லித்தூள் சேர்க்கவும். கலக்கி மேரினேட் செய்யப்பட்ட கோழியை சேர்க்கவும். மசாலாவுடன் நன்றாகப் பூசப்படும்வரை கோழித்துண்டுகளை சேர்க்கவும்.
  4. 3-4 நிமிடங்கள் வறுத்து இப்போது அரைத்த மசாலாவை சேர்த்து கலக்கவும். வெந்நீர் சேர்க்கவும் உங்களுக்குத் தேவையான பதத்திற்கு. கோழி தனது ஈரப்பதத்தை வெளியேற்றும் என்பதை மறக்கவேண்டாம். அதனால் அதற்கேற்றபடி தண்ணீர் சேர்க்கவும்.
  5. சர்க்கரையையும் உப்பையும் உங்கள் சுவைக்கேற்ப சேர்க்கவும். எலுமிச்சை இலைகளை/எலுமிச்சைப் புல்லையும் கொத்துமல்லி இலைகளையும் சேர்க்கவும். 4-5 விசில் வரை பிரஷர் குக்கரில் சமைக்கவும்.
  6. பிரஷர் குறையும்வரை காத்திருக்கவும். ஒரு பரிமாறும் பாத்திரித்தில் எடுத்து சாதம் அல்லது நீர் தோசையோடு பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்