Photo of Thavla vadai by Krishnasamy Vidya Valli at BetterButter
1167
4
0.0(0)
0

தவல வடை

Jan-16-2018
Krishnasamy Vidya Valli
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தவல வடை செய்முறை பற்றி

பருப்பு வகைகள் மற்றும் அரிசி சேர்த்து செய்யப்படும் வடை இது ஒருவருக்கு இரண்டு வீதம் ஐந்து நபர்களுக்கு கொடுக்கலாம் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி - 1 மேஜைகரண்டி
  2. புழுங்கல் அரிசி - 1 மேஜைகரண்டி
  3. கடலைப்பருப்பு - 1 மேஜைகரண்டி
  4. துவரம்பருப்பு - 1 மேஜைகரண்டி
  5. பாசிப்பருப்பு - 1 மேஜைகரண்டி
  6. உருட்டு உளுந்து - 1 மேஜைகரண்டி
  7. பச்ச மிளகாய் - 1
  8. மிளகாய் வத்தல் - 2
  9. வெங்காயம் - பொடியாக நறுக்கியது - 1 மேஜைகரண்டி
  10. தேங்காய் துருவல் - 1 மேஜைகரண்டி
  11. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  12. பெருங்காயம் - 2 சிட்டிகை
  13. இஞ்சி - 1 சிறிய துண்டு
  14. உப்பு - 1 தேக்கரண்டி
  15. வடை பொரிப்பதற்குதேவையானஅளவுஎண்ணெய்
  16. தாளிக்ககடுகு-1/2தேக்கரண்டி
  17. கருவேப்பிலை - 2 ஆர்க்கு
  18. எண்ணெய்-1/2தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரிசி பருப்பை தண்ணீர் விட்டு அரைமணி நேரம் முதல் நாற்பது நிமிடங்கள் வரை ஊறவைக்கவும்
  2. மிக்ஸியில் தண்ணீரை வடித்து விட்டுஉப்பு பெருங்காயம் பச்ச மிளகாய் மிளகாய் வத்தல் இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்
  3. மாவை கரண்டியால் எடுத்து விடும் பதத்திற்கு வைக்கவும்
  4. தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து சேர்க்கவும். வெங்காயம் கொத்தமல்லி இலை தேங்காய் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கரண்டியால் மாவை எண்ணெய்யில் விடவும்
  6. பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  7. தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்