வீடு / சமையல் குறிப்பு / முட்டையில்லாத முழு கோதுமை மாவு கேக்

Photo of Eggless Whole Wheat Flour Cake by Kartikeya Mishra at BetterButter
6908
559
4.4(0)
0

முட்டையில்லாத முழு கோதுமை மாவு கேக்

Feb-12-2016
Kartikeya Mishra
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
8 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வேலண்டின்ஸ் டே
  • முட்டை இல்லா
  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • டின்னெர் பார்ட்டி
  • கிட்ஸ் பர்த்டே
  • கிறிஸ்துமஸ்
  • பிரெஷர் குக்
  • விஸ்கிங்
  • பேக்கிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 8

  1. 150 கிராம் முழு கோதுமை மாவு
  2. 90 கிராம் வெண்ணெய்
  3. 1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ்
  4. 400 கிராம் சுண்டக் காய்ச்சிய பால்
  5. 1.5 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  6. 1/4 கப் + 2 தேக்கரண்டி தண்ணீர்

வழிமுறைகள்

  1. உங்கள் கேக் டின்னில் கொஞ்சம் வெண்ணெய் மற்றும் மாவால் தடவிக்கொள்ளவும்.
  2. ஒரு கிண்ணத்தில், வெண்ணெய், சுண்டக்காய்ச்சியப் பால் வெண்ணிலா எசென்சை அடித்துக்கொள்ளவும்.
  3. பேக்கிங் பவுடர், முழு கோதுமை மாவை வேறொரு பாத்திரத்தில் சேர்த்துக் கலந்துகொள்ளவும்.
  4. ஒரு 5 லிட்டர் பிரஷர் குக்கரில் (அல்லது பெரியதில்) 1-2 கப் உப்பைச் சேர்த்துக்கொள்ளவும். அதன் மீது ஒரு உயர் ரேக் அல்லது ஓட்டையுள்ள தட்டை வைக்கவும். குக்கரை மிதமானச் சூட்டில் சூடுபடுத்திக்கொள்க. மூடியை அதன் மீது வைத்து விசிலை எடுத்துவிடவும்.
  5. 1/2 மாவையும் கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து மெதுவாகக் கலந்துகொள்க. மீதமுள்ள மாவையும் தண்ணீரையும் சேர்த்து மென்மையான அடர்த்தியான மாவைத் தயாரித்துக்கொள்க.
  6. மாவைத் தயாரித்து வைத்துள்ள கேக் டின்னில் ஊற்றி இந்த டின்னை சூடானக் குக்கரில் கவனமாக வைக்கவும். தீயை மிதமான நிலையில் முதல் 2-3 நிமிடங்கள் வைத்து குறைத்து 35 நிமிடங்கள் பேக் செய்யவும்.
  7. 35 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு கத்தியை நுழைத்துச் சோதித்துப் பார்க்கவும். சுத்தமாக வந்தால் உங்கள் கேக் வெந்துவிட்டது என்று பொருள்.
  8. கொஞ்சம் சாக்லேட் சிரப்பை கேக் துண்டுகள் மீது ஊற்றிப் பரிமாறவும். சூடாக இருக்கும் போது பரிமாறுவது சிறப்பாக இருக்கம்!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்