வீடு / சமையல் குறிப்பு / இதயம் மறைந்துள்ள கேக்/ஆச்சர்யமளிக்கும் கேக்/ வேலண்டைன் கேக்

Photo of Hidden Heart Cake /  Surprise Cake  /   Valentine Cake by Bhawya Sankar at BetterButter
14731
186
4.5(0)
0

இதயம் மறைந்துள்ள கேக்/ஆச்சர்யமளிக்கும் கேக்/ வேலண்டைன் கேக்

Feb-13-2016
Bhawya Sankar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
120 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வேலண்டின்ஸ் டே
  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஐரோப்பிய
  • பேக்கிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. சிவப்பு கேக்குக்கானப் பொருள்கள்:
  2. மைதா - 2 கப்
  3. ஐசிங் சர்க்கரை - 1 1/4 கப்
  4. பேக்கிங் பவுடர் -1 தேக்கரண்டி
  5. முட்டைகள் - பெரியது
  6. வெண்ணெய், அறையின் வெப்பத்தில் - 1 கப்
  7. வெண்ணிலா எசென்ஸ் - 2தேக்கரண்டி
  8. உப்பு - 3/4 தேக்கரண்டி
  9. சிவப்பு உணவு நிறமி
  10. சாக்லேட் கேக்குக்கானப் பொருள்கள்-
  11. மைதா - 1 1/2 கப்
  12. கொகோ பவுடர், இனிப்பு சேர்க்கப்பட்டது - 1/2 கப்
  13. ஐசிங் சர்க்கரை - 1 1/2கப்
  14. பேக்கிங் பவுடர் -1 தேக்கரண்டி
  15. முட்டைகள் - பெரியது
  16. வெண்ணெய், அறை வெப்பத்தில் -1 கப்
  17. வெண்ணிலா எசென்ஸ் - 2 தேக்கரண்டி
  18. உப்பு - 3/4 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. சிவப்பு கேக் தயாரிப்பதற்காக: ஓவனை 180 டிகிரி செண்டிகிரேடுக்குப் ப்ரீ ஹீட் செய்யவும். பேக்கிங் பேனை கொஞ்சம் வெண்ணெயால் தடவவும். ஒரு பெரிய கலவைப் பாத்திரத்தில் சர்க்கரை, வெண்ணெயை எடுத்துக்கொள்ளவும். கை மிக்சரால் மென்மையாக பஞ்சுபோல் ஆகும்வரை அடித்துக்கொள்ளவும்.
  2. வெண்ணிலா எசென்ஸ், ஒரு நேரத்தில் 2 முட்டைகள் எனச் சேர்த்து மீண்டும் அடித்துக்கொள்ளவும். பாத்திரத்தின் பக்கங்களைச் சுரண்டி மேலும் 2 முட்டைகளைச் சேர்த்து மீண்டும் அடித்துக்கொள்ளவும். இப்போது அனைத்து உலர் பொருள்களையும் கிரீம் மாவில் சலித்துக்கொள்ளவும். கட்டி சேராமல் நன்றாக அடித்துக்கொள்ளவும்.
  3. உணவு நிறமியைச் சேர்த்து சமச்சீரான நிறத்தைப் பெறும்வரை கலந்துகொள்க. தேவையான நிறத்தைப் பெறும்வரை மேற்கொண்டு துளிகளைச் சேர்த்துக்கொள்ளவும். தயாரித்து வைத்துள்ள பாத்திரத்தில் மாவை மாற்றி, 50 நிமிடங்களுக்கு அல்லது பல் குத்தும் குச்சியை கேக்கில் மையத்தில் நுழைக்க சுத்தமாக வரும்வரை பேக் செய்யவும்.
  4. வெந்ததும், கவனமாக ஓவனில் இருந்து எடுக்கவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவைக்கவும். அதன்பின்னர் கூலிங் ரேக்கில் கேக்கை எடுத்து முற்றிலுமாக ஆறவிடவும். ஆறியதும், கிளிங் தாளினால் சுற்றி பயன்படுத்தப்படும் வரையில் பிரிஜ்ஜில் வைக்கவும்.
  5. சாக்லேட் மாவு: பேக்கிங் பாத்திரத்தைக் கொஞ்சம் வெண்ணெயால் தடவி எடுத்து வைக்கவும். ஒரு பெரிய கலவைப் பாத்திரத்தில், சர்க்கரை, வெண்ணெயை எடுத்துக்கொள்ளவும். கை மிக்சரால் மென்மையான பஞ்சுபோல் அடித்துக்கொள்ளவும்.
  6. வெண்ணிலா எசென்ஸ், ஒரு நேரத்தில் 2 முட்டைகள் வீதம் சேர்த்து அடித்துக்கொள்ளவும். பாத்திரத்தின் பக்கங்களைச் சுரண்டிவிட்டு 2 முட்டைகள் சேர்த்து மீண்டும் அடித்துக்கொள்ளவும். இப்போது அனைத்து உலர் பொருள்களையும் கிரீம் மாவில் சலித்துக்கொள்க. கட்டிகள் சேராமல் அனைத்தையும் கலந்தகொள்க.
  7. அழகான இதயங்களை வைத்து பேக் செய்வதற்கு: சிவப்பு கேக்கை பிரிஜ்ஜில் இருந்து எடுத்து சமமாகத் துண்டு போட்டுக்கொள்ளவும். இதய வடிவிலான குக்கீ கட்டரை எடுத்து கேக்கின் ஒவ்வொரு துண்டிலும் இதய வடிவத்தில் வெட்டவும். இதயத்தை அதனுள் வைக்கவும். (மீந்துபோன கேக்கைக்கொண்டு கேக் பாப்களைச் செய்யலாம்)
  8. இப்போது 1/4 கீரிஸ் செய்யப்பட்ட பாத்திரத்தில் சாக்லேட் மாவை நிரப்பி சமமாகப்பரவுவதற்கு மெதுவாக தட்டவும். ஒவ்வொருக்கும் அடுத்து இதயங்களை லோஃப் பாத்திரத்தின் மையத்தில் அடுக்கவும். 2 இதயங்களுக்கிடையில் இடைவெளியில்லாமல் பார்த்துக்கொள்ளவும். நெறுக்கமதாக அடுக்கவும்.
  9. பேக் செய்யப்பட்ட இதயங்களைச் சற்றி கொஞ்சம் இடம் விடவும், அப்போதுதான் சாக்லேட் மாவினால் இடத்தை நிரப்ப இயலும். அது இதயத்தை மறைக்கும். இப்போது மீதமுள்ள சாக்லேட் மாவினை பாத்திரத்தின் பக்கங்களில் நிரப்பவும்.
  10. கவுண்டரை மெல்ல தட்டவும். அப்போதுதான் மாவு இதயங்களைச் சற்றிலும் நிரப்பும். வேகமாக தட்டவேண்டாம். இதயங்கள் இடமாறிவிடக்கூடும். 50 நிமிடங்கள் அல்லது பல் குத்தும் குச்சி கேக்கின் மையத்தில் நுழைத்தால் சுத்தமாக வரும்வரை பேக் செய்யவும்.
  11. வெந்ததும், பாத்திரத்தில் 15 நிமிடங்கள் ஆறட்டும். அதன்பின்னர் கூலிங் ரேக்கிற்கு மாற்றவும். மறைந்துள்ள கேக் தயார்!
  12. உங்கள் விருப்பப்படி கேக்கை நீங்கள் உறைய வைக்கலாம். இங்கே நான் கடைந்த கீரிம் புராஸ்டிங்கையும் வானவில் தூவல்களையும் பயன்படுத்தினேன். தடா! முடிந்துவிட்டது... சப்பரான சுவையான ஆச்சர்யமளிக்கும் கேக் தயார்:) மகிழ்க.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்