வீடு / சமையல் குறிப்பு / எளிமையான சாக்லேட் ஃபட்ஜ்

Photo of Easy Chocolate Fudge by Meena Kumar at BetterButter
2829
210
4.4(0)
0

எளிமையான சாக்லேட் ஃபட்ஜ்

Feb-13-2016
Meena Kumar
4 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வேலண்டின்ஸ் டே
  • வெஜ்
  • ஈஸி
  • அமெரிக்கன்
  • மைக்ரோவேவிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நெஸ்லே அறை இனிப்பு சாக்லேட் சிப்சுகள் - 340 கிராம்
  2. இனிப்பு சேர்க்கப்பட்ட காய்ச்சியப்ப ால் - 396 கிராம்
  3. உலர் பழங்கள் - தேவையான அளவு (எந்த நிறமாக இருந்தாலும், விதை இல்லாதது)

வழிமுறைகள்

  1. பேக்கிங் பாத்திரத்தை பார்ச்மெண்ட் தாளோடு கொஞ்சம் கூடுதலாக பக்கவாட்டுகளில் லை செய்யவும். அப்போதுதான் ஃபட் செட்டானதும் நகர்த்துவதற்குப் போதுமான இடம் இருக்கும். தயாராக வைத்துக்கொள்ளவும் (பார் போன்று வேண்டும் என்பதால் நான் இரண்டு லோஃப் பான்களைப் பயன்படுத்தினேன்).
  2. டிசைன் செய்யவேண்டுமானால் திட்டமிட்டுக்கொள்ளுங்கள். உலர் பழங்களை விருப்பமான வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும்.
  3. ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் ஒட்டுமொத்தக் காய்ச்சியப் பாலையும் சாக்லேட் சிப்சுகளில் பாதியையும் கலந்துகொள்க. 30 விநாடிகள் மைக்ரோவேவ் செய்து பாத்திரத்தை எடுத்து பொருள்களை நன்றாகக் கலக்கி மைக்ரோவேவிற்குள் மீண்டும் வைத்து ஒவ்வொரு 30 விநாடிக்கும் மீண்டும் மீண்டும் செய்க.
  4. சிப்சுகள் நன்றாகக் கலந்து உருகியிருப்பதை உறுதி செய்யவும்.
  5. மீதமுள்ள சாக்லேட் சிப்சுகளைச் சேர்த்து ஒரு நிமிடம் விட்டுவைத்துப் பிறகு அனைத்தையும் நன்றாகக் கலந்து லைன் செய்யப்பட்ட டிரேயில் அதை ஊற்றிக்கொள்ளவும்.
  6. உலர் பழங்களை நீங்கள் தேர்வு செய்த வடிவத்தில் வைத்து சற்றே அழுத்தவும். (இதை வேகமாகச் செய்யவேண்டும் இல்லையேல் உலர் பழங்கள் சாக்லேட்டில் ஒட்டாது). முழுமையான ஆறவிட்டு பிரிஜ்ஜில் 2 மணி நேரம் வைக்கவும்.
  7. தேவையான வடிவத்தில் வெட்டிப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்