ராம் லட்டு | Ram Laddoo in Tamil

எழுதியவர் Anjana Chaturvedi  |  16th Feb 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Ram Laddoo recipe in Tamil,ராம் லட்டு, Anjana Chaturvedi
ராம் லட்டுAnjana Chaturvedi
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    10

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    6

    மக்கள்

3804

0

ராம் லட்டு recipe

ராம் லட்டு தேவையான பொருட்கள் ( Ingredients to make Ram Laddoo in Tamil )

  • பாசிப்பயிர் - 3/4 கப்
  • கடலைப் பருப்பு - 1/4 கப்
  • பச்சை மிளகாய் - 3
  • இஞ்சித் துருவல் - 1 தேக்கரண்டி
  • புதிய கொத்துமல்லி - 2 தேக்கரண்டி
  • சிவப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  • பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
  • சீரகம் - 1/2 தேக்கரண்டி
  • உப்பு - 1 தேக்கரண்டி
  • அலங்கரிக்க -
  • முள்ளங்கித் துருவல் - 1 கப்
  • புதிய கொத்துமல்லி - 2 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  • கருப்பு உப்பு - 1/2 தேக்கரண்டி
  • புளிச் சட்னி - 3/4 கப்
  • பச்சை சட்னி - 3/4 கப்

ராம் லட்டு செய்வது எப்படி | How to make Ram Laddoo in Tamil

  1. இரண்டு பருப்புகளையும் கழுவிப் போதுமானத் தண்ணீரில் ஊறவைக்கவும். 4 மணி நேரங்கள்.
  2. தண்ணீரை வடிக்கட்டி மீண்டும் கழுவி இரண்டு பருப்புகளையும் பச்சை மிளகாய் பெருங்காயத்தோடு அரைத்துக்கொள்ளவும். (இந்தக் கலவை அடர்த்தியாகவும் சற்றே கரடுமுரடாகவும் இருக்கவேண்டும். மென்மையாக செய்துகொள்ளவேண்டாம்)
  3. கலவையை ஒரு கிண்ணத்தில் எடுத்து சற்றே மென்மையாகவும் உப்பும்படியும் அடித்துக்கொள்ளவும்.
  4. சரி பார்ப்பதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை எடுத்து ஒரு சிறிய மாவு உருண்டையை அதில் போடவும், தண்ணீரில் மிதந்தால் வறுப்பதற்குத் தயார். மூழ்கினால் தண்ணீரில் மிதக்கும்வரை அடிக்கவேண்டும்.
  5. செய்துமுடித்துவிட்டால், உப்பு, சீரகம், இஞ்சித் துருவல் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும்
  6. ஆழமானப் பாத்திரத்தில் எண்ணெயைச் சூடுபடுத்தி கைகளை நனைத்து கலவையில் ஒரு சிறிய பாகத்தை உங்கள் கைகளில் எடுத்து சூடான எண்ணெயில் சிறிய உருண்டைகளைப் போடவும்.
  7. மிதமானச் சூட்டில் பொன்னிறமாக மாறும் வரை பொரித்தெடுத்து ஒரு பேப்பர் நேப்கினில் வடிக்கட்டவும்.
  8. அதன்பின் ஒரு பரிமாறும் தட்டில் எடுத்து உருண்டைகளைச் சற்றே அழுத்திக்கொள்ளவும்.
  9. புளி சட்னி, பச்சை சட்னியை அதன்மீது தெளிக்கவும்.
  10. இப்போது முள்ளங்கித் துருவலை அதன் மீது சேர்த்து எலுமிச்சைச் சாறைப் பிழிந்து கொஞ்சம் மிளகாய்த் தூளைத் தூவி கருப்பு உப்பை சேர்க்கவும் (அல்லது டேபிள் சால்ட்டை பயன்படுத்தவும்)
  11. இறுதியாக கொஞ்சம் நறுக்கிய கொத்துமல்லியைத் தூவி ஒரு பல்குத்தும் குச்சியோடு பரிமாறவும்.

எனது டிப்:

வறுத்த உருண்டைகளை தக்காளி கெச்சப் அல்லது எந்தவொரு சுவையான தொட்டுக்கையுடனுடம் பரிமாறலாம்.

Reviews for Ram Laddoo in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.