வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் தவா புலாவ்

Photo of Paneer Tawa Pulao by Shaheen Ali at BetterButter
5926
679
4.7(0)
1

பன்னீர் தவா புலாவ்

Feb-16-2016
Shaheen Ali
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மகாராஷ்டிரம்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாதம் - 2 கப்
  2. வெங்காயம் - 1 நடுத்தர அளவு நறுக்கியது
  3. முட்டைக்கோஸ் - 1/2 கப் நறுக்கியது
  4. கேரட் - 1 துண்டாக்கப்பட்டது
  5. குடமிளகாய் - 1 துண்டாக்கப்பட்டது
  6. பட்டாணி - 1/2 கப் புதியது அல்லது பிரிஜ்ஜில் வைத்தது
  7. உருளைக்கிழங்கு - 1 நடுத்தர அளவு நறுக்கியது
  8. தக்காளி - 1 பெரிய அளவு நறுக்கியது
  9. பச்சை மிளகாய் - 2 பிளந்தது
  10. இஞ்சி - 1/2 தேக்கரண்டி அரைத்தது
  11. பூண்டு - 1/2 தேக்கரண்டி அரைத்தது
  12. மஞ்கள் தூள் - 1/2 தேக்கரண்டி
  13. சிவப்பு மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
  14. பாவ் பஜ்ஜி மசாலா - 2 தேக்கரண்டி
  15. உப்பு - தேவையான அளவு
  16. எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
  17. வெண்ணெய் - 2 தேக்கரண்டி
  18. பன்னீர் / காட்டேஜ் வெண்ணெய் - 100 கிராம் துண்டுகளாக நறுக்கியது
  19. புதிய கொத்துமல்லி - அலங்கரிப்பதற்காக

வழிமுறைகள்

  1. இரண்டு கப் மீந்துபோன சாதத்தை எடுத்து கைகளால் கட்டிகளை உடைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். மீந்துபோன சாதம் இல்லையெனில், புதிதாகச் சமைத்து ஒரு பெரிய டிரேயில் பரவச் செய்யவும். ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருப்பதற்காக.
  2. ஒரு வானலியில்/கடாயில் வெண்ணெயைச் சூடுபடுத்தி பன்னீர் கனசதுரத் துண்டுகளைப் போட்டு சற்றே பொன்னிறமாகும்வரை வறுக்கவும். அதை ஒரு சமையல் துண்டிற்கு மாற்றி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அதே வெண்ணெயில் அரைத்த இஞ்சி, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
  4. இப்போது நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பளபளப்பாகவும் அவற்றின் பச்சை வாடை போகும்வரையிலும் வதக்கிக்கொள்ளவும்.
  5. தக்காளி, கேரட், குடமிளகாய், பட்டாயி, முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றோடு மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய்த் தூள், பாவ் பஜ்ஜி மசாலா சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக 2 நிமிடங்கள் வறுக்கவும்.
  6. உப்பு சரிபார்த்து சாதம், எலுமிச்சை சாறு சேர்த்து கவனமாக அரிசி ஒட்டாமலும் உடையாமல் கலந்துகொள்ளவும்.
  7. மசாலா சாதத்தோடு சமமாகக் கலக்கும் வரை கிளரிக்கொண்டே இருக்கவும்.
  8. நறுக்கிய கொத்துமல்லி வறுத்த பன்னீரை அதனோடு சேர்த்து ஒரு கிண்டு கிண்டவும்.
  9. சலாத் மற்றும் வெங்காய ரைத்தாவோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்