வீடு / சமையல் குறிப்பு / டீ கடை பாணி மசாலா வடை

Photo of Tea Kadai Style Masala Vadai by Sandhya Ramakrishnan at BetterButter
5521
21
5.0(0)
0

டீ கடை பாணி மசாலா வடை

Feb-16-2016
Sandhya Ramakrishnan
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. கடலைப் பருப்பு- 1 கப்
  2. துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி
  3. அரிசி மாவு - 1 தேக்கரண்டி
  4. பச்சை மிளகாய் - 2
  5. சிவப்பு மிளகாய் - 2
  6. புதினா இலைகள் - 10-15 இலைகள்
  7. கொஞ்சம் கொத்துமல்லி இலைகள் (3-4 தண்டுகள்)
  8. இஞ்சி - 1 இன்ச் துண்டு
  9. பூண்டு - 3 பற்கள்
  10. சோம்பு/பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
  11. வெங்காயம் - 1 பெரிய அளவு (நன்றாக நறுக்கப்பட்டது)
  12. சுவைக்கு உப்பு
  13. பொறிப்பதற்குத் தேவையான உப்பு

வழிமுறைகள்

  1. கடலைப் பருப்பையும் துவரம் பருப்பையும் கழுவி இரண்டு மணி நேரங்களுக்கு ஊறவைக்கவும். அதன்பிறகு வடிக்கட்டியில் அதை வடிக்கட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. இதற்கிடையில், பெருஞ்சீரகம், இஞ்சி, பூண்டு, புதினா இலைகள், கொத்துமல்லி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.
  3. இப்போது ஊறவைத்து வடிக்கட்டப்பட்ட பருப்புகளைக் கலவையோடு கலந்து தண்ணீர் விடாமல் கரடுமுரடாக அரைத்துக்கொள்க. மிக்சி சிக்கிக்கொள்வதுபோல் இருந்தால் இரண்டொரு தேக்கரண்டி தண்ணீர் விட்டு பிறகு அரைத்துக்கொள்ளவும்.
  4. மாவை கரடுமுரடாக, மென்மையாக இல்லாமல் அரைத்துக்கொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். கொஞ்சம் பருப்புகள் முழுமையாக அப்படியே இருப்பது நல்லது- மேலும் கொஞ்சம் உப்பு சேர்க்கவும், அரைக்கும்போது.
  5. அரைத்த பிறகு மாவை பிரிட்ஜில் ஒரு அரை மணி நேரம் வைக்கவும். (இது பொறிக்கும்போது அதிகம் எண்ணெய் இழுக்காது)
  6. இதற்கிடையில், வெங்காயத்தை நன்றாக நறுக்கி, சில்லென்றிருக்கும் வடை மாவில் போடவும். மேலும் அரிசி மாவையும் கலந்து எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துகொள்ளவும்.
  7. ஒரு கடாயில் எண்ணெயை சூடுபடுத்தவும். ஒரு கையளவு மாவை எடுத்து உருண்டை பிடிக்கவும். உள்ளங்கையால் உருண்டையைத் தட்டி சூடான எண்ணெயில் விடவும்.
  8. வடையின் இரண்டு பக்கத்தையும் பொன்னிறமாகும்வரை பொறித்து, பேப்பர் துண்டில் வடிக்கட்டவும். வழக்கமாக இந்த வடைகள் அடர்த்தியான பக்கத்தில் மொறுமொறுப்பாக இருப்பதைக் கவனிக்கவும்.
  9. சிறப்பான சுவைக்குச் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்