வீடு / சமையல் குறிப்பு / மட்டன் குருமா

Photo of Mutton Korma by Aameena Ahmed at BetterButter
2380
198
4.3(0)
0

மட்டன் குருமா

Feb-17-2016
Aameena Ahmed
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • ஆவாதி
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் - 500 கிராம்
  2. தயிர் - 1/2 கப் அடித்தது
  3. மஞ்சள்தூள்- 1/4 டீக்கரண்டி
  4. காஷ்மீர் சிகப்பு மிளகாய்த்தூள் - 2 டீக்கரண்டி
  5. சுவைக்கேற்ப உப்பு
  6. தக்காளி விழுது 1/2 கப்
  7. உலர்ந்த தேங்காய் தூள் - 4 தேக்கரண்டி
  8. பச்சை மிளகாய் - 3-4 வெட்டியது
  9. எண்ணெய் - 1/4 கப்
  10. வெங்காயம் - 3 முதல் 4 நடுத்தர அளவு ( விழுது செய்வதற்கு )
  11. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
  12. முழு கரம் மசாலா
  13. பச்சை ஏலக்காய் 4
  14. காய்ந்த ஏலக்காய் - 1
  15. இலவங்கம் 4 சிறிய அளவு
  16. கிராம்பு - 4
  17. தண்ணீர்- 2 கப்
  18. கொத்தமல்லித் தூள் - 1 டீக்கரண்டி
  19. சீரகத்தூள் 1 டீக்கரண்டி
  20. அலங்கரித்திற்கு
  21. பிரவுன் வெங்காயம் - ஒரு கையளவு ( நொறுக்கியது )
  22. பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
  23. பச்சை கொத்தமல்லி - ஒரு கையளவு நன்றாக நறுக்கியது
  24. கரம் மசாலா தூள் - 1/2 டீக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயை எடுத்து, ஒரு டீக்கரண்டி எண்ணெய் ஊற்றி வெட்டிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். சில நிமிடங்கள் வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் அதனை ஆறவைத்து மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
  2. இப்போது ப்ரஷர் குக்கரில் எண்ணெயை சேர்க்கவும், பின்னர் முழு கரம் மசாலாவை சேர்க்கவும்.
  3. அதன் பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கிக்கொள்ளவும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும் பின்னர் தக்காளி விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. அதன் பிறகு மட்டன் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும் மற்றும் உலர்ந்த தேங்காய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி கொண்டு பின்பு தயிர் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.
  5. பின்பு உப்பு, சிகப்பு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கொத்தமல்லித் தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்து கொழுப்பு பிரிக்கிற வரை வதக்கவும்.
  6. இப்போது தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் 3 விசில் விடவும் அல்லது சாதாரண கடாயில் சமைத்தால் லேசான தீயில் மட்டன் கொழுப்பு கரையும் வரை வேகவிடவும்.
  7. நீங்கள் இப்போது தேவைக்கேற்ப கெட்டி தன்மையை சரி செய்துக் கொள்ளலாம்.
  8. இப்போது அனைத்தையும் அலங்கரித்து 5 நிமிடம் மூடி வைக்கவும். பின்னர் சூடாக பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்