Photo of Pav bhaji by Nandita Shyam at BetterButter
9066
843
4.4(1)
3

பாவ் பாஜி

Feb-17-2016
Nandita Shyam
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • மகாராஷ்டிரம்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஜி செய்வதற்கு-
  2. வெண்ணெய்-3 தேக்கரண்டி
  3. வெங்காயம்- 1 பெரியது, நன்றாக வெட்டப்பட்டது
  4. இஞ்சி பூண்டு விழுது- 1 டீக்கரண்டி
  5. உருளைக்கிழங்கு- 2 பெரியது, தோல் உரித்து சதுரமாக வெட்டப்பட்டது
  6. கேரட்- 1, பெரியது, தோல் உரித்து சதுரமாக வெட்டப்பட்டது
  7. பிரஞ்சு பீன்ஸ்- 10, வெட்டப்பட்டது
  8. காலிஃபிளவர்- 12-15 துண்டு
  9. பட்டாணி- 1/2 கப்
  10. குடைமிளகாய்- 1 சிறியது, நன்றாக வெட்டப்பட்டது
  11. தக்காளி-3, 1 நன்றாக வெட்டப்பட்டது மற்றும் இரண்டு மசித்தது
  12. சுவைக்கேற்ப உப்பு
  13. சர்க்கரை-1/2 டீக்கரண்டி
  14. மஞ்சள்தூள்- 1/4 டீக்கரண்டி
  15. மிளகாய் தூள்- 1 டீக்கரண்டி
  16. பாவ் பாஜி மசாலா- 1 தேக்கரண்டி
  17. கருப்பு உப்பு- 1/2 டீக்கரண்டி
  18. அலங்கரிக்க கொத்தமல்லி இலை
  19. பாவ் செய்வதற்கு
  20. 8-9 லாடி பாவ்கள்
  21. பாவை வறுப்பதற்கு வெண்ணைய்
  22. பாவ் பாஜி மசாலா- தேவையெனில்
  23. பரிமாறுவதற்கு:
  24. 1 பெரிய வெங்காயம்- நன்றாக வெட்டப்பட்டது
  25. அலங்கரிக்க கொத்தமல்லி இலை- 1 தேக்கரண்டி
  26. எலுமிச்சை-2 குறுக்காக வெட்டப்பட்டது

வழிமுறைகள்

  1. பாஜி செய்வதற்கு
  2. அடிக்கனமான கடாயில் வெண்ணையை விட்டு சூடு செய்யவும் அதில் வெட்டிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை மணம் இல்லாத வரை வதக்கவும்.
  3. அத்துடன் உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும்.
  4. பின் அதில் காலிஃபிளவர் துண்டுகள், வெட்டப்பட்ட குடைமிளகாய், உப்பு, சர்க்கரை, மஞ்சள்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து 3-4 நிமிடம் வதக்கவும்.
  5. இதில் வெட்டிய தக்காளி மற்றும் மசித்த தக்காளியை சேர்த்து நன்கு கலந்துக்கொண்டு அத்துடன் இரண்டரை கப் தண்ணீர் விட்டு காய்கறிகளை நன்றாக வேகவிடவும்.
  6. மசித்த உருளைக்கிழங்குடன் கலவையை நன்றாக கலக்கி கொள்ளவும். பின் அதில் பாஜி மசாலா மற்றும் கருப்பு உப்பு சேர்த்து மேலும் மசிக்கவும்.
  7. பாஜியை 5 நிமிடம் குறைவான சூட்டில் கொதிக்கவிடவும். கலவை கெட்டியானது அதில் மேலும் அரை கப் தண்ணீர் விட்டு இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும்.
  8. கொத்தமல்லி இலையை வைத்து அலங்கரித்து பாவுடன் பரிமாறவும்.
  9. பாவ் தயார் செய்ய:
  10. பாவ்வினை செங்குத்தாக வெட்டி அதன் உள்பகுதியில் வெண்ணையை தடவவும்.
  11. சூடான வாணலியில் பாவ்வின் வெண்ணெய் தடவப்பட்ட பகுதியை கீழ்நோக்கி வைத்து மிருதுவாகவும் பொன் நிறத்திலும் வரும்வரை வறுக்கவும்.
  12. இதை போல் பாவ்வின் மறுபக்கத்தையும் வறுத்துக் கொள்ளவும். தேவையென்றால் மேலும் வெண்ணையை சேர்த்துக்கொள்ளவும்.
  13. பரிமாறுவதற்கு
  14. தட்டில் ஒரு கப் பாஜி, இரண்டு வறுத்த பாவ், நறுக்கிய வெங்காயம் மற்றும் எலுமிச்சை பழத்தை வைக்கவும்.
  15. பாஜியின் மேல் வெண்ணையை விட்டு தேவையெனில் பாவ் பாஜி மசாலா சேர்த்துக்கொள்ளவும் மேலும் அலங்காரிக்க கொத்தமல்லி இலையை தூவி உடனடியாக பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lakshmi Lakshmisuvinesh
Sep-04-2018
Lakshmi Lakshmisuvinesh   Sep-04-2018

superb

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்