வீடு / சமையல் குறிப்பு / டாக்கா நவாப் சிக்கன் புலாவ்

Photo of Dhakai Nawabi Murg Pulao by Sayan Majumder at BetterButter
2805
69
0.0(0)
0

டாக்கா நவாப் சிக்கன் புலாவ்

Feb-17-2016
Sayan Majumder
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • கடினம்
  • மற்றவர்கள்
  • கிழக்கு இந்திய
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 6 கோழிக் கால், மார்புத் துண்டுகள்
  2. 200 கிராம் தயிர்
  3. 3 தேக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது
  4. 1 தேக்கரண்டி மல்லித்தூள், சீரகச் சாந்து, கசகசா சாந்து
  5. 1 தேக்கரண்டி கரம் மசாலா
  6. 2 தேக்கரணடி பப்பாளிக்காய் சாந்து
  7. மிளகாய் சாந்து 2 தேக்கரண்டி
  8. சிவப்பு மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
  9. 5 பெரிய வெங்காயம் வறுத்தது
  10. 1 வெங்காயம் நறுக்கியது
  11. 4-5 தேக்கரண்டி சோயா எண்ணெய்
  12. சுவைக்கேற்ற உப்பு
  13. புலாவ் அரிசி 500 கிராம்
  14. 1 வெங்காயம் நறுக்கியது
  15. புதிய கிரீம் 2 தேக்கரண்டி
  16. 1 தேக்கரண்டி இஞ்சிபூண்டு விழுது
  17. 1 கப் பால்
  18. குங்குமப்பூ சில தாள்கள்
  19. 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
  20. சிறிய ஏலக்காய் 3 துண்டுகள்
  21. 1 கருப்பு ஏலக்காய்
  22. 2 தேக்கரண்டி பன்னீர் தண்ணீர்
  23. 6 தேக்கரண்டி கொய்யா
  24. 6-8 தேக்கரண்டி நெய்
  25. 3 பச்சை மிளகாய்
  26. முந்திரி பருப்பு உங்கள் விருப்பப்படி
  27. உலர் திராட்சை உங்கள் விருப்பத்திற்கேற்ப
  28. பிஸ்தா பருப்பு உங்கள் விருப்பத்திற்கேற்ப
  29. 4 இலந்தம்பழம்
  30. 2 பிரிஞ்சி இலை
  31. 1 இலவங்கப்பட்டை
  32. சுவைக்கேற்ற உப்பு
  33. ஒரு சிட்டிகை சர்க்கரை

வழிமுறைகள்

  1. எண்ணெய் மற்றும் நறுக்கிய வெங்காயத்தைத் தவிர அனைத்துச் சேர்வைப்பொருள்களோடும் சிக்கன் துண்டுகளை மேரினேட் செய்யவும். குறைந்த பட்சம் 3 மணி நேரத்திற்கு.
  2. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடத்தி கொஞ்சம் உப்புடன் வெங்காயத்தை வறுக்கவும். மேரினேட் செய்த சிக்கனைச் சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைக்கவும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
  3. குறைந்தது 15 நிமிடங்களுக்கு தண்ணீரில் அரிசியை ஊறவைக்கவும்.
  4. ஒரு கடாயில் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் அல்லது இரண்டையும் சேர்த்து வெங்காயத்தை வறுக்கவும். பிரிஞ்சி இலை, இலவங்கப்பட்டை, சிறியது பெரியதுமான ஏலக்காய், இஞ்சிப்பூண்டு விழுது சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். ஊறவைத்த அரிசியைச் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  5. தண்ணீர், எலுமிச்சை சாறு, பச்சை மிளகாய், உப்பு, சர்க்கரை, உருளைக்கிழங்கு, முந்திரி பருப்பு, உலர் திராட்சை சேர்க்கவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு அரிசி வெந்திருக்கிறதா என்று பார்க்கவும். சிக்கனில் பாதியைக் கலந்துகொள்ளவும்.
  6. பாலில் ஊறிய குங்குமப்பூ, கொய்யா, வறுத்த வெங்காயம், பிஸ்தா பருப்பு, புதிய கிரீம் சேர்த்து இன்னொரு அடுக்கு அரிசியைச் சேர்த்து கொஞ்சம் வறுத்த வெங்காயத்தையும் உலர் பழங்களையும் மேல் பகுதியில் சேர்க்கவும். 5 லிருந்து 6 நிமிடங்களுக்குப் பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு கொஞ்சம் பன்னீர் தண்ணீரைச் சேர்க்கவும்.
  7. டாக்கா நவாப் சிக்கன் புலாவ் சூடாகப் பரிமாறத் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்