Photo of Sennangunni Idly Podi by Vins Raj at BetterButter
3412
8
0.0(2)
0

Sennangunni Idly Podi

Feb-03-2018
Vins Raj
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • சௌத்இந்தியன்
  • ரோசஸ்டிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. 1/2 கப் சென்னாங்குன்னி
  2. 1/4 கப் கடலை பருப்பு
  3. 1/4 கப் உளுந்தம் பருப்பு
  4. 1/2 மே.க. சீரகம்
  5. 1/2 மே.க. மிளகு
  6. 4 சிவப்பு மிளகாய் வற்றல்
  7. 1 கொத்து கருவேப்பிலை
  8. 1/4 தே க பெருங்காயம்

வழிமுறைகள்

  1. கடலை பருப்பையும் உளுந்தம் பருப்பையும் தனி தனியாக வாணலியில் பொன்னிறமாய் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்ததாக சீரகத்தையும் மிளகையும், மிளகாய் வற்றலையும் ஒன்றாக வாணலியில் வறுத்துக்கொள்ளவும். சீரகம் பொரிய ஆரம்பிக்கும் சூட்டிலிருந்து எடுத்திடவும்.
  3. பின்னர் மிதமான சூட்டில் கருவேப்பிலை மொறு மொறுயென்று வறுபட்டவுடன் அடுப்பிலிருந்து எடுக்கவும்.
  4. சென்னாங்குன்னியை மிதமான தீயில் மொறுமொறுவென்று ஆகும் வரை வறுக்கவும்
  5. சென்னாங்குன்னி சற்று ஆறினவுடன், முறத்தில் புடைக்கவும். புடைக்கும் போது சென்னாங்குனியுடன் ஒட்டி இருக்கும் மணல், கால் மற்றும் தூசி பிரிந்து விடும். கண்டிப்பாக புடைக்க வேண்டும்.
  6. மிக்ஸில் ஜாரில் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல், சீரகம், மிளகு, தேவைக்கேற்ப உப்பு, பெருங்காயத்தை ஒன்றாக கொரகொரப்பாக பொடியாக்கவும்.
  7. கடைசியில் சுத்தம் செய்து வைத்துள்ள சென்னாகுனியை போட்டு அரைத்துக்கொள்ளவும்
  8. சுவையான சென்னாங்குன்னி பொடியை நல்லெண்ணெய் விட்டு இட்லியுடன் பரிமாறவும்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mymoonah Sayeeda
Feb-04-2018
Mymoonah Sayeeda   Feb-04-2018

Sennanguni na kooni nu solvaangalae athuva

Ayesha Ziana
Feb-03-2018
Ayesha Ziana   Feb-03-2018

Excellent..

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்