வீடு / சமையல் குறிப்பு / ஜிகர்தண்டா | பாதாம் பிசின்/ரோஸ் மில்கில் பாதாம் பிசின்

Photo of Jigarthanda | Badam Pisin/Almond Gum in Rose Milk by Babitha Costa at BetterButter
7043
91
4.5(0)
0

ஜிகர்தண்டா | பாதாம் பிசின்/ரோஸ் மில்கில் பாதாம் பிசின்

Feb-23-2016
Babitha Costa
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் - 1/2 லிட்டர்
  2. சர்க்கரை - 1/4 கப் (சரிசெய்யவும்)
  3. பாதாம் பிசின் - சில கற்கள்
  4. ரோஸ் எசென்ஸ் - 2 தேக்கரண்டி
  5. பிங்க நிற உணவு நிறமி - ஒரு சிட்டிகை (ரோஸ் எசென்ஸ் பிங் நிறத்தில் இருந்தால் தவிர்க்கவும்)
  6. ஐஸ் கிரிம் - 1 கரண்டி (ரோஸ் சுவையூட்டி பயன்படுத்தினேன், நீங்கள் வெண்ணிலா சுவையூட்டியைக்கூடப் பயன்படுத்தலாம்)
  7. டூட்டி ஃப்ரூட்டி - கொஞ்சம் (மேலே தூவுவதற்கு) (விரும்பினால் மட்டும்)

வழிமுறைகள்

  1. ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து பாதாம் பிசினை ஊறவைக்கவும். இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும், அடுத்தநாள் காலை எப்படி அது ஊதியிருக்கிறது என்பதை பார்ப்பீர்கள். (மிகச் சிறிய பிசின் கற்களைப் பயன்படுத்தவும்).
  2. ஒரு கடாயில் பாலை சூடுபடுத்தவும். அது 3/4 பாகமாகக் குறையட்டும். சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். அதன்பிறகு நிறுத்திவிட்டு ரோஸ் எசென்ஸ் மற்றும் நிறமி சேர்க்கவும் (சேர்ப்பதாக இருந்தால்). நன்றாகக் கலக்கவும். ஆறட்டும். பயன்படுத்தும் வரை பிரிட்ஜில் இருக்கட்டும்.
  3. ஒரு பெரிய பரிமாறும் கிளாசை எடுத்து 2 அல்லது 3 தேக்கரண்டி ஊறவைத்த பாதாம் பிசினைச் சேர்க்கவும் (ஜெல்லி வகை). குளிர்விக்கப்பட்ட பாலை ஊற்றவும். அதன் மேல் ஒரு கரண்டி ஐஸ் வைக்கவும்.
  4. கொஞ்சம் டூட்டி ஃப்ரூட்டியை அதன் மேல் பக்கத்தில் தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்